QUOTES ON #விழியின்பார்வை

#விழியின்பார்வை quotes

Trending | Latest
3 NOV 2019 AT 23:25

மானே தேனே மட்டும் தான்
கவிதை என்று நினைத்த
எனக்கு...
சிலிர்பூட்டும் சின்ன
சின்ன பார்வையில்
எழுதிக் காட்டுகிறாய்
நொடிக்கொரு ஹைக்கூ
கவிதையை...!

-



வேல்விழி கொண்டு
கணைத் தொடுக்கிறாள்
விண்மீனுக்கு...
விண்மீனும் சொக்குது
விழிமீன்கள் கண்டு....

-


28 AUG 2019 AT 20:27

உன் விழிகளின்
பார்வையில் திளைத்த
இதழின் மேல் நின்ற
வார்த்தை யாவும்
தட்டுத்தடுமாறி
தத்தளிக்கிறது
மை பூசிய மான்விழியை
கண்டவுடன்..!

-


28 AUG 2019 AT 20:47

மானுக்கு விரித்த
மைவிழியாளின்
மாயவலையில்
மாட்டிக்கொண்டது
என்னவோ
மயங்கி நின்ற
எந்தன் மனது!

-


20 AUG 2019 AT 21:37

உன் விழி பேசும்
காதல் கவிதைகளையே
என் மனம் எழுத்துக்களாய்
உருவகப் படுத்துகிறது...

-



முதல் முறையாக மடித்துக் கட்டுகையில் கை நழுவியது வேட்டி..,
புள்ளி மானின் கடைக்கண் பார்வை புலி மீது பட்டதால்!..

-


4 JUL 2019 AT 8:33

அவள் முகத்தை பார்க்காமல் செல்கிறேன். அவளை பிடிக்காமல் அல்ல அவள் என்னை பார்க்காமல் செல்வதை பார்க்க முடியாதலால்.

-


9 JUN 2019 AT 22:59

உன்னில் கலந்து
உள்ளத்தில் குடியிருக்கும்!
கவிமகனின் நினைவில்
தவத்தின் மடியில்
தியானிப்பது ஏனோ!
முழுமனதுடன் ஏற்பதற்கா!
மடியினில் சாய்ந்து காவியம்
படைப்பதற்கோ!

-


25 FEB 2019 AT 15:13

விரல்கள் மீட்டினால் மட்டுமே "யாழ்" இசைக்கும்...
என் அருகாமையே, என்னவளின் இமையை "இசைத்து" இருவரின் இதயத்தையும் தாளமிட்டு தாலாட்டும். ஆசீர்

-



வேல் விழிப் பார்வை
என்பது இதுதான்
போலும் ...

நீ என்னைக் காணும்
ஒவ்வொரு முறையும்
ஆயிரம் வேல்
பாய்ந்தாற் போல்
கிழித்தெறியப்படுகின்றன
என் இதயம் ...

-