ஐஸ்வர்யா..
முத்துமணி முத்தாரமே
முல்லைப்பூ மலர்சரமே
முத்தமிழ் இசையகமே
முக்கனிச் சுவையகமே
முப்பட்டகம் ஒளியகமே
முதற்கொடி தளிரகமே
முதுஅறிவு பெட்டகமே
முப்பால் பொருளகமே
முண்டாசுக் கவியகமே
மும்மாரி பொழிலகமே
முக்கடலின் முத்தகமே
முகரிமை தலையகமே
முகிலாடும் வானகமே
முதுமொழி அறிவகமே
முழுமுதல் ஐசுவர்யமே!-
தோழர்அருண் மே17 இயக்கம்
தோள்சுமக்கா பிள்ளையிவன்
தோழரென அழைத்திடுவான்
தோற்றத்தில் முழுமதியழகன்
தோரணையில் அருணனிவன்
தோள்கொடுக்கும் பேரன்பன்
தோலுரிக்கும் போராளியிவன்
தோன்றாத்துணை பேராயன்
தோன்றிடும் பேரொளியிவன்
தோடமில்லாத இயக்கமிவன்
தோடிப்பண் இசையுமுமிவன்
தோலாட்டமதை வேரறுப்பான்
தோல்வியை தோற்கடிப்பான்
தோயமதின் வெண்முத்திவன்
தோயதரமதின் பனித்தலிவன்
தோய்ந்தாரின் முக்கியனிவன்
தோழமையின் தோன்றலிவன்
தோடகத்தின் செஞ்சுடரோனே
தோன்றுகயென்றும் புகழோடு!!-
சீமா ❤
அன்பின் மொழியாள்..
அன்பை ஊட்டும் தாய்மை
அறிவை தீட்டும் ஆளுமை
அழகை கூட்டும் சேய்மை
அருளை நீட்டும் இறைமை
அனுபவம் தந்திடும் பெருமை
அறம் போற்றிடும் வாய்மை
அமைதி அளித்திடும் பசுமை
அறிவுரை வழங்கிடும் புதுமை
அகத்திணை பூட்டும் மேன்மை
அகச்சுவைப் மீட்டும் மென்மை
அகவிருள் விரட்டும் மெய்மை
அக்கறை காட்டும் தோழமை
அகமார்க்கம் தேடும் நேர்மை
அகமகிழ்ச்சி சூடும் தூய்மை
அகலக்கவி பாடும் புலமை
அடுக்களை இடும் செழுமை
அஞ்செழுத்து ஓதிடும் நன்மை
அகம்பாவம் நீக்கிடும் எளிமை
அசட்டை போக்கிடும் வலிமை
அற்புதம் படைத்திடும் மகிமை-
குரங்காட்டியும் குரங்கும்
ஆடுராமா... ஆடுராமா..
ஆடுறான் இராமனிங்கே
ஆதிவனம் தொலைத்தே
ஆடுறான் அம்பலத்தில்
வாலில்லா மனுசந்தான்
வானரத்தை ஆட்டிவிக்க
வாய்பேசா இராமனுமே
வாழ்வின் கதியானானே
பாடும் வித்தைக்காரனின்
பாடு குரங்கினாட்டத்தில்
பாகுபாடு எதுவுமில்லை
பாரமும் தெரியவில்லை
பத்துமாசம் சுமக்கலதான்
பசிபோக்கும் பிள்ளதான்
பல்டி அடிச்சுகாட்டுறான்
பச்சாதாபம் காட்டுங்கள்
கைத்தடி அசைவிலாட
கைதட்டிக் குதிக்கிறான்
கைகூப்பி வணங்குறான்
கையேந்தி தட்டைநீட்ட👇👇
-
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
விட்டில் பூச்சிகள் விளையாட
மெல்ல மெல்ல ஆசை வரவே
விரல்களால் உருவம் வடித்தேன்
மெட்டுகள் அமைத்தான் தம்பி
விதவிதமான வடிவம் செய்தோம்
மெல்லிய சலங்கை ஒலி கேட்க
விதிர்த்து பயத்தில் நின்றோமே
மெதுவாக உருவமசைந்து வரவே
விறைத்து போய் நடுநடுங்கினோம்
மெத்தென வந்தாள் குட்டிப்பாப்பா-
😒 - அக்காவ் உனக்கு ஒரு விசயம் தெரியுமா ...நம்ம கணேசு அவேன் பொண்டாட்டிய பேபி பேபினு கூப்பிடுறானா
😔 - இதுக்கு ஏண்டி நீ அலுத்துக்கிற
😒 - அட அவேன் அம்மா கேட்டதுக்கு அம்மா பேபினா பேய் பிசாச சுருக்கி கூப்பிடுறேனு சொன்னாம்ல...
😔 - அட கூவை ... அவன் பொஞ்சாதி எங்கிட்ட சொன்னா அம்மாகாரி கத்துவானு அப்படிச் சொல்லிற்கான்டி பேபினா பேரழகி பிரியமானவளாம்...
😒 - அப்படியா சங்கதி...-
நிலமகளாய் பிறத்தல் வேண்டும்
புவிமகளின் ஆடையாக வேண்டும்
வான்மகனின் காதலியாக வேண்டும்
காற்றை சமைக்கும் இல்லாளாக வேண்டும்
புள்ளினங்களின் வாழ்விடமாக வேண்டும்
மனிதர்களின் நண்பனாக வேண்டும்
இருக்கும்போது உணவாகிட வேண்டும்
இல்லாதபோதும் உரமாகிட. வேண்டும்
ஓரறிவுடைய மரமாய் பிறத்தல் வேண்டும்
-
அரட்டைகளும் கூசசலும்
கதைகளும் புனைவுகளும்
சிறுநகையும் சிறுநடையும்
மரத்தடியும் மாணவர்களும்
வட்டமிட்டு அமர்தலும்
வட்டவட்டப் பேழையின்
அமுதன்னமும் பகிர்வும்
காக்கைகுருவியும் எறும்பும்
எங்களுடன் உணவருந்தின
வானம்பாடி பறவைபோல்
வாலில்லாத குரங்குபோல்
ஆடிப்பாடிய கொண்டாட்டம்
இடைவேளை நேரத்தை
இடைவெளியில்லாது கழித்தோம்-
இதழ்கள் இணையா
இதழகல் இசைத்திடு
இல்லறம் இனிதாகும்
இனிய நண்பர்களே புரியவில்லையா....உதடுகள் ஒட்டாத திருக்குறள் கூறுகிறேன்
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
பற்றில்லா பொருளால் துன்பமில்லை ...
என் பதிவின் பொருள் புரிந்ததா😊-
வீட்டின் மணியோசை அடிக்க
கதவை திறந்து பார்க்கிறேன்
அனாதை ஆசிரமத்திலிருந்து
வருகிறோம்
முடிந்த உதவி செய்யுங்கள்
நீங்கள் முகவரி தாருங்கள்
நாங்கள்
நேரில் கொடுத்துக்கொள்கிறோம்
அவர்கள் முகத்தில் கதவை
அறைந்து சாற்றினேன்
மீண்டும் மணியோசை
கதவை திறந்தேன்
கோவில் கும்பாபிஷேகம்
ஐந்து லிட்டர் நெய் உங்கள் உபயம்
மகிழ்ச்சி இரண்டு லிட்டர்கானது
வாங்கிக்கொள்ளுங்கள்
அடுத்தமுறை பார்க்கலாம்
என் பாவ மூட்டையின்
எடை கூடியது-