"மணி அண்ணே!!"
"நாளையிலிருந்து YQ வில "தர்ம தரிசனத்து" தடை பன்னுறாங்களே...
இனி தரிசனுத்து முந்தி மாதிரிஆட்கள் வருவாங்களா..?"
"அடேய்... அனாகோன்டா வாயா...
நம்ம ஆட்களை பத்தி உனக்கு சரியா தெரியலை...
பக்கத்துல திறந்து கிடக்கும் கோயிலுக்கு ஒருநாளும் போகமாட்டாங்கடா...
ஆனியன் தோச, ஸ்பெசல் ஆனியன் தோச மாதிரி, VIP தரிசனம், சாதா தரிசனம் என கம்பி போட்டு காச புடுங்குற கோயிலில் தான் காச கொண்டுபோய் கொட்டுவாங்க...
"YQ" விலும், கூட்டமும் வசூலும் களை கட்ட போகுது"...
-
9942412718
இதுவரை எங்கள் எழுத்துகளுக்கு கரும்பலகையாக இருந்து உதவிய இச்செயலிக்கும், அன்புடன் நட்பு பாராட்டிய நட்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து மகிழ்வுடன் விடை பெறுகிறேன்.
🙏🙏🙏-
இதுவரை பூக்களை
பார்வையிட கட்டணம்
வசூலித்த மரங்கள்,
பூக்களிடமும் கட்டாய
கட்டணம் கேட்கின்றன...
(விடை பெற தயார் நிலையில்)
🙏🙏🙏-
சிறு வணிகர்களிடம்
எதுவும் வாங்க கூடாதென
வைராக்கியம் உடையவர்கள்,
இரண்டு ரூபாய்க்கு
வெற்றிலை பாக்கு
இரண்டு ரூபாய்க்கு
கருவேப்பிலை மல்லி
வாங்க வரும்போது
காட்டும் "ஏளனமே"
சிறு வியாபாரியின்
இதயத்தை கொல்கிறது...-
பிறப்பை விட
இறப்பு ருசியானது...
ஆனாலும்,
இறப்பு தானாக
வரும் வரை
போராடி வாழுங்கள்.-
வாரிசுகள் இருக்கும்
அரசியல்வாதி
பத்து தலைமுறைக்கு தேவையானதை
சுரன்டுகிறான்...
வாரிசு இல்லாத
அரசியல்வாதி
நூறு தலைமுறைக்கு தேவையானதை
தோண்டி எடுக்கிறான்.-
காதல் வந்தால்,
பட்டமரம் பூ பூக்கும்...
பூக்கள் எல்லாமே,
காய் காய்க்கும்...
கனியும் முன்பே,
காய்கள் இனிப்பாகும்.-
தட்டி கேட்க
தயங்குபவர்களை
கூட மன்னித்து விடலாம்,
எவையெல்லாம்
சமூதாய தீமையென
உணராமல்
இருப்பவர்களே
இந்த சமூதாயத்திற்க்கு
மிகப்பெரிய
சமூதாய தீமை...-
குடியரசு தின பேரணியில்
தமிழக அரசின் கண்காட்சி
வாகனம்
"மூன்று முறை திருத்தம் செய்த பின்னரும்" நிராகரிப்பு...-
இன்னொன்றை பிடிக்க ஆசைப்படும் நமது தூண்டில் மனது...
தேடுவது தேடும் பொருளாகவே வாழ்வின் இறுதிவரை இருப்பதே நலமானது.-