திடீரென்று தான் காதல் பிறக்கிறது
திடீரென்று தான் காதல் கவியாகிறது
திடீரென்று தான் இதயம் தாளம் போடுகிறது
திடீரென்று தான் பூக்கள் சிரிக்கிறது
திடீரென்று தான் நெஞ்சம் நிமிர்ந்து பார்க்கிறது
திடீரென்று தான் மழை பூமியை தழுவுகிறது
திடீரென்று தான் மௌனம் பேசுகிறது
திடீரென்று தான் தாமரை திறக்கிறது
திடீரென்று தான் மனம் பறக்கிறது
திடீரென்று தான் மனம் மழலையாகிறது-
Karthik 🌹¯\_(ツ)_/¯ᥫ᭡ 90s kid
Never getting married at this l... read more
திடீரென்று தான் வழங்கப்படுகிறது மன்னிப்புகள் திடீரென்று தான் மறந்து போகிறது ஒரு உறவு
திடீரென்று தான் அழிந்து போகிறது அழகிய நினைவு
திடீரென்று தான் அர்த்தம் பெறுகிறது கசங்கிய கவிதை ஒன்று
திடீரென்று தான் அரங்கேற்றம் ஆகிறது சில அழகிய நிகழ்வுகள்-
உடலின் ஸ்பரிசத்தால் மோகம் தூண்டப்படுகிறது! அந்த காதலின்
ஆயுள் மிகக் குறைவே
Infatuation is aroused by the touch of the body! That love has a very short lifespan.-
இதயத்தின் பிணைப்புகளில் கட்டமைக்கப்பட்டு, ஆன்மாவுடன் உருவாக்கப்பட்ட அன்பு நீண்ட
ஆயுளைக் கொண்டுள்ளது.
Love built on the bonds of the heart and created with the soul has a long life.-
தினமும் என்னுள் மலர்ந்து விடு
சிறு முகையாய் துளிர் தொடு
மறைவுகளின் மர்மமாய்
நெஞ்சில் ஒளி துளியாய்
நினைவாய் நிறைந்து விடு...-
தனிமை வந்து கதறி அழுது
இதயம் சிதறி பனியாகிறதோ
அன்பின் தேடல் ஒளியாய்த் தோன்றும்
மறுபடி தேவை இல்லை என்றாலும்-
புன்னகை எனும்
அரிதாரம் பூசிக்கொண்டு
அன்பை அழகாய் நேர்த்தியாய் வெளிப்படுத்தும் போதெல்லாம்
விழிகள் ஈரமாவதை
இவனால் மறைத்திட
முடியவில்லை...-
நான் சோகமாய் வந்தாலும்
சோர்ந்து போய் வந்தாலும் எனை குழந்தையென அன்போடு வாரி நெஞ்சோடு அனைத்துக்கொள்ளும் பேரன்பின் அரிதாரம் நீ...-
புன்னகை எனும் அரிதாரம் பூசிக்கொண்டு அவதாரம் எடுப்பதில் என்னை விஞ்ச உலகில் எவரும் இல்லை அரிதாரமே எனது வாழ்க்கையானதோ..... அரிதாரம் பூசிக்கொள்வதே என் வாடிக்கையாகிவிடுமோ...
-