கவிதாயினி கவி   (✍🏻 Kavi_ammu)
78 Followers · 52 Following

நிரந்தரமில்லா உலகில் எதுவும் நிரந்தரமில்லை ...
Joined 4 May 2020


நிரந்தரமில்லா உலகில் எதுவும் நிரந்தரமில்லை ...
Joined 4 May 2020

பூவிற்கு மட்டுமல்ல .,
புதுப்புது அன்பிற்கும்
ஆயுள் குறைவு
தான் !!!

-



ஏன் எனக்கிந்த
நிலை ?

-



கொஞ்சம் உன்
உதட்டை வாடகைக்கு
கொடேன் ..
என் மேனியில்
காற்றுப்படாத அங்கங்களின்
வியர்வையை கொஞ்சம்
துடைத்துக்கொள்கிறேன் !!!

-



இறந்துப்போன என் காதலுக்கு
கண்ணீர் அஞ்சலி
செலுத்திக் கொண்டிருக்கையில் ,
பூச்செண்டோடு மற்றுமொரு காதல் நீட்டுகிறாய் ...
ஏற்கவும் மனமில்லை ,, உன்னை இழக்கவும் மனமில்லை ..
எனினும் ,, முன்பை காட்டிலும்
குழம்பிக் கிடக்கிறேன் ..
இரண்டாம் நேசம் முறைதானா
என்று 🥺❤️‍🩹

-



எப்படி சொல்லுவேன் ,, எனக்கு உன்னை பிடித்திருக்கிறதென்று ... ஒருவேளை அக்கணம் நீயென்னை மறுத்தாயாயின் எப்படி மீண்டு வாழும் என்னுயிர் நீயின்றி !!! 🥺

-



எனக்கு உன்னைப் பற்றி யாரிடமாவது சொல்ல வேண்டும் போல தோன்றிற்று ... என்ன செய்வது , யாரிடம் சொன்னாலும் தவறென கருதுவரே ... அதனால் கண்ணாடியை பார்த்து எனக்குள் உள்ள உன்னிடமே உன்னைப் பற்றி கூறிவிட்டேன் .. நீ என்றால் எனக்கு எத்தனை பிரியமென்று 🫰🏻❣️

-



இனிப்பை சுற்றி
மொய்த்துக்கொள்ளும்
எறும்பாய்
உன்னை சுற்றியே
அலைகின்றன - என்
மன அலைகள் !!!

-



என்னைக் கொஞ்சம்
ஆதரி ...

இந்த இரவின்
இருட்டும் , நிசப்தமும்
என்னை குரூரமான
நினைவுக்குள் இழுத்துச்
செல்கிறது !!!

-



பின் தொடரும்
நிழலிடம் கேட்டேன் !!
ஏன் , என்னை
தொடர்கிறாய் என்று ??

குறுநகையை வீசியபடி
அது கூறியது ,
துணையற்ற உன்
வாழ்வில் நானாவது
உனக்கு துணையாய்
வரலாமென்று !!!

-



கண்ணே !!
நம்மிடையே காதல்
உலவுவதால் !!!

-


Fetching கவிதாயினி கவி Quotes