முத்தம்
அதுவரை
காமமாய்
இருந்தது...
இன்று
இனிப்பு பொருளானது
என்
இனியவ(மக)ளால்...
-
கவிதை பயிலும் முயற்சியில்...
உன் அழகுப் புன்னகையும்
அர்த்தமில்லா உளறல்களும்
அவ்வளவு அழகானதடி...
நீ என்ன செய்தாலும்
உனை கைகளில் ஏந்தி
கொஞ்சி மகிழ்கிறேன்
நீ எட்டி நடக்க
விரல் கொடுப்பேன்...
நிமிர்ந்து நடக்க
தோள் கொடுப்பேன்...
உன் எண்ணிலா கனவுகளுக்கு
உயிர் கொடுப்பேன்...-
கொங்கு தமிழில் கொஞ்சம்
கோபம் கொண்டால் மிஞ்சுவோம்
மரியாதையில் மாநிலதின் முதலிடமே
உதகை மலைத்தொடரின் குளுமையும்
கேரளா நாட்டின் வளமையும்
குடிகொண்ட எங்கள் ஊரிதே
பிழைப்புதேடி எங்கே சென்றாலும்
என்றும் பிடித்ததாய் இருப்பது
எங்கள் கோவையே....-
ஆயிரம் ஆயிரம்
முகங்கள் கடந்தேன்
அவற்றுள் பல
முகமூடி அணிந்தே
திரியும் போலிகளாய்
இன்னும் பல
முன் சிரித்து பின் முதுகில்
குத்தும் துரோகங்களாய்
அரிய சில முகங்களே
பாதையின் பொருள் பொதிந்த
அன்புருவாமாய்,
இவர்களை கடந்து செல்ல
இயலாமல், கை பிடித்து
கடைசிவரை அழைத்து செல்ல
விரும்புகிறேன்...
-
ஏன் அழுகிறாய்
என் கண்மணியே...
நான் முத்தம் பதிக்கையில்
மீசை முற்கள் தைக்குதோ...
உனை அள்ளி அணைக்கையில்
எனதங்கம் நெரிக்குதோ...
தொட்டு வருடுகையில்
தும்பை தேகம் நோகுதோ...
-
என் முகம் கண்டு
சிரிக்கிறாய்
என் குரல் கேட்டு
குதிக்கிறாய்
இருந்தும் தோள் சேர்க்கையில்
ஏனோ முகம் சுழிக்கிறாய் 😒
உனை அள்ளி கொஞ்சிட
ஆசைதான் தினம்
உன் அழுகையால்
நோகுதே என் மனம்
நீ என் மார் தேடி உறங்கிடும்
நேரமும் நம்மை நெருங்கிடும்...-
அமுதும் தமிழும்
நீ
பேசும்
வார்த்தைகள்
தமிழென்றால்,
உன்
மௌனத்தில்
பிரசிவிக்கும்
பாவனைகள்
அமுதாகும்...
-