அடித்து உடைபவரெல்லாம்
வீரன் புத்திசாலி அல்ல,
பொறுத்து கொள்பவரெல்லாம்
கோழை முட்டாள் அல்ல.-
சில குருட்டு
நம்பிக்கைகள் கூட
கோழைகளையும்
வாழ வைக்கின்றது.
ஆகையால்
அதிலொன்றும்
தவறில்லை!-
முகத்துக்கு முன் ஒரு நடிப்பு
முதுகுக்குப் பின் ஒரு பேச்சு.....
முகத்துக்கு முன் போரிடுபவன் வீரன்
முதுகுக்குப் பின் போரிடுபவன் கோழை
நாம் யார் என்பதை நிதானிப்போம்!....-
தற்கொலை 👎
முடிவுரை எழுதப்படாத பல காதல் கதைகளின் முன்னுரை ✌️
தனிமையில் இருப்பவரை குறிவைக்கும் அழகிய அம்பு ✌️
கோழைகள் கடைசியாக எடுக்கும் துணிச்சலான முடிவு ✌️
♥️✌️💚-
கோழைகளையும்
பயந்தாங்கோழிகளையும்
புறங்காட்டி ஓடுபவர்களையும்
நான் வெறுக்கிறேன் !-
ஏன் பிறந்தேன்
என்று கூட
யோசித்ததில்லை...
ஏன் வாழ்கிறேன்
என்று அனுதினமும்
மனப்போராட்டம்...
வாழ்ந்து பார்ப்போம்
என்ற மனதைரியம்
ஒருபுறம் இருந்தாலும்
ஒருநொடி கோழையாகிறேனே...
-
என் ஏதிரியாக
முன் நின்று
வீரனாகு...
கோழையாக
முதுகிற்கு
பின் நின்று
துரோகியாகதே....-
விரோதியை
விழி பார்த்து
வீராப்பாய் பேசும்
வீரனிடம் கூட
விரும்பும் பெண்ணவளின்
விழி பார்த்து
பேச சொன்னால்
கோழைபோல்
குழைந்துதான் நிற்பானடி..
இதில் நான் மட்டும் என்ன
விதிவிலக்கா..-
பலவீனமானவன் (கோழை)
எளிய வழிகளைத் தேடிச் செல்வான்,
பலம் கொண்டவனின் (வீரன்)
வழிகளெங்கும் கர்ஜனைகள் எதிரொலிக்கும்,
பயமறியா படை வீரன் இலக்கை நோக்கி
பாய்ந்துச் செல்வான்.-
தற்கொலைக்கு பயப்படாத கோழையின் குமுறல்
இதோ பாருங்கள்,,
மலடாய் போன விவசாய
விளைநிலத்தின் வாரிசின்
வட்டி வீத கணக்கு தலைக்கு ஏறி
தாம்புக் கயிறாய் தொங்கி நிற்குது..
இதோ பாருங்கள்,,
இரு மன இசைவோடு
கற்பழிக்கப்பட்ட காதலின் சடலம்
தண்டவாளத்தில் தடம் புரண்டு
இரத்தவாடை வீசுவது..
இதோ பாருங்கள்,,
வறண்டுப் போன ஏழ்மையின்
வயிற்றில் பற்றி எரியும்
பஞ்சத்தோடு பூத உடலும்
தீப்பற்றிக் கருகி கண்ணயர்ந்தது..
-