karthi keyan   (KKK)
264 Followers · 69 Following

கயல்விழி 🎈
Joined 10 July 2018


கயல்விழி 🎈
Joined 10 July 2018
28 JAN 2022 AT 2:01

நானறியா அவள்,
நாளிரவின் போதை,
நான் தேடும் தரிசனம்
நாணமறிந்த புன்னகை,
வானம் நிறைந்த மர்மம்
ஒளிரும் ஒற்றை திங்கள்,
எனையாளும் விழி என்
காவல் தேவதை.— % &

-


28 JAN 2022 AT 1:29

உனக்காக உன்னுடன் இருந்தவள்
உன்னை கடந்து செல்லும் போது
ஒரு வழி இரண்டாய் வெளியாகும்,
அவள் பின் செல்லும் ஓர் விழி,
காத்திருப்பில் மறு விழி பார்த்திருக்கும்.— % &

-


22 JAN 2022 AT 0:35

கொஞ்சம் பொறு,
அவசரத்தில் கிடைப்பதை
ரசிக்க இயலாது, நிலைக்காது,
வேட்கையோடு காத்திருந்து
நிலைப்பதை உரிய நேரத்தில்
மறுப்பின்றி ஏற்றுக்கொள்.

-


20 JAN 2022 AT 22:38

நிஜங்களின் பரிணாம வளர்ச்சியில்
மாற்றம் கொண்டிருக்கும்
மனங்களிடமிருந்து அகன்று,
தன்னை ஏற்று கொள்ளும்
கனவு பரிமாணத்தில் மழலை மொழி
பேசி களிப்படைந்து களைத்து
விழித்ததும் கலையாதிரு காதல் கனவே.

-


20 JAN 2022 AT 0:04

இழப்பினது விழிகள் மூப்படைந்து
மெலிந்த வலிகளானது,
ஆளரவற்ற ஓடையில் ஓலத்துடன்
ஏக்கத்தின் தாக்கம் ஐக்கியமானது,
காற்றின் மேடையில் மலையை தழுவிட தூது செல்லும் மழலை மேகம்,
தனக்கென உருவான தாகம் தணித்த
இரவின் இதழே இன்பமுறு.

-


15 JAN 2022 AT 9:25

எண்ணங்களை வெளிப்படையாக
வரம்புகளற்று பகிரும் பொழுது
உரிமையுடையவராய் உரியவர்
இருத்தலே உறவு.

-


11 JAN 2022 AT 10:53

ஊதுபை கலவி கொண்ட காற்றினில்
உலவும் சில நேரம் மனதின் பெரும்
சுமை அகன்று அகம் புறம் அமைதியானது.

-


7 JAN 2022 AT 22:02

தன்னை தவிர்த்து தன் இணை
பறவையாகும் பொழுது,
தனிமையின் சிறகுகள் ஓய்விலிருந்து
வெளிப்பட்டு பறக்கிறது.

-


30 DEC 2021 AT 11:03

இதோடு முடிந்தது
உருகி உருகி
ஒளியேற்றிய
மெழுகின் வாழ்க்கை.

-


21 DEC 2021 AT 23:44

முழு நாளின் சலிப்பை
சரிப்படுத்தி நிம்மதியான
உறக்கத்தினை நிறைவேற்றும்
இரவின் முடிவு.

-


Fetching karthi keyan Quotes