வான் துளிகளாய்
அங்கங்கே மோதி
சிதறி எனை நானே
வேடிக்கை பார்த்து
கொள்கிறேன்.-
Home maker.
மஞ்சள் பூக்கள்
என் முகம் பார்த்து
மகிழ்ந்து தலையசைக்கும்
நானும் அப்டியே தான்
எங்கெங்கு நான் சென்ற போதும்....
என் நெஞ்சமே உன்னை சேரும்...
My dear மஞ்சள் பூக்களே 💋💋💋-
நிறைய பால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, chakra gold tea, white sugar சேர்த்து சூடாக பருகும் tea சூடான அமிர்தம் ஆஹா 💗💗💗கூடவே "வாசம் சிந்தும் வண்ணச் சோலை... லலலலலா...
வாசல் தேடி வந்த வேலை..
லலலலலா..."
-
நடந்து நடந்து
சோர்ந்த பாதங்களை
தழுவித் தழுவி
முத்தமிடுவதும்
மின்னி மின்னி
அலங்கரிப்பதும்
தங்கமகள் சூடிய
கொலுசுகளே...-
In bus
"எட்டாத உயரத்தில் கம்பியை வைத்தது யாரு
அதை எண்ணி எண்ணி welder ஐ
வியக்கிறேன்... 😂"-
தலைப்புச் செய்தி
கணவர் : இளம்
பெண்ணை
எரித்து கொன்ற
இளைஞர் கைது.
மனைவி : ஐயயோ
வெளில போகவே
பயமா தான் இருக்கு.
கணவர்: அடியே,
இளம் பொண்ணுங்க
பயந்தா தானடி சரி.
நீ எதுக்கு பயப்படுற?
மனைவி : 🙄😏😏😏.
கணவர் : ஆளையும்
தலையும் பாரு,
பயமா இருக்குதாம் ல்ல.-
சிரிப்பது இதயத்தை
பத்திரமாக பார்த்துக்கொள்ள
முழுவதுமாக உதவுமாம்,
நான் படிச்சேன்
so நல்லா பேசி சிரிங்க.
நன்றி, வணக்கம் 🙏-
ஒளிர்வதற்காக
இரவை நோக்கி
அமைதியாக காத்திருக்கும்
நிலா போல நானும்
நிம்மதிக்காக
வாழ்வை நோக்கி
மௌனமாக காத்திருக்கிறேன்...
காத்திருப்பது கடினமான இன்பம்.-