நீ
எனக்கு எத்தனை
துன்பம் தந்தாலும் ...
உன்னை நான்
மன்னிப்பேன் ...
என் மன்னிப்பே
நான் உனக்கு
கொடுக்கும்
மிகப்பெரிய
தண்டனை ....
-
உன்
தாய்
இறந்த பின்
நீ
கண்ணீர்
சிந்துவதை விட ...
அவள்
இருக்கும் போது
கண்ணீர்
சிந்தாமல்
பார்த்துக் கொள் ...!!!!-
என் உயரில் கலந்து,
உடம்பில் சுமந்து,
உறவாய் பிறந்து,
என் மூச்சுக் காற்றாய்
வாழ்ந்து கொண்டிருக்கும்
என்
அன்பு
மகளுக்கு
அம்மாவின்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!-
மெளனத்தினால்
சில வலிகளை
மறைத்து விடலாம் ...
சிரிப்பினால்
சில வலிகளை மறந்துவிடலாம்...
கண்ணீரில்
சில வலிகளை
கரைத்து விடலாம் ...
வார்த்தைகளால்
சில வலிகளை மொழிபெயர்த்து விடலாம்...
ஆனால்,
சில வலிகள்
மட்டும் தான்
மரணத்திலும் உயிர்வாழ்ந்து
கொண்டிருக்கிறது
மனிதனின் மனதில் .... !!!
-
உன்
கண்ணீரின் வலியை
எவரால் உணர்ந்து
கொள்ள முடியுதோ ...
அவரே
உன் மீது
உண்மை
அன்பு கொண்டவர் ....!!!-
என் மரண தருவாயில் கூட ,
என் இரு விழியும் மூட மறுத்துவிடும் ...
மனதில் உள்ள
வலிகளை நினைத்தால் ....!!!
-
அன்புள்ள அப்பா ...
என் ஒவ்வொரு இரவிலும்,
நான் விழிகள் மூடும் முன்,
என் நினைவுக்குள் வந்து
என் விழியை ஈரமாக்கி
சென்று விடுகிறது ...
உன் விழிகள் மூடிய
அந்த கடைசி இரவு ... !!!
-
என் அன்பு தந்தையே ...
ஆயிரம் சண்டைகள் போட்டாலும்
"அம்மா" என்றழைக்கும்
உன் அன்பான குரலை
இன்று கேட்கமுடியாமல் தவிக்கிறேனே !!!
எத்துனை வசதிகள்
இருந்து என்ன பயன்,
உன் குரலை
பதிவு செய்து
வைக்காத பாவியாக
நான் இருந்து விட்டேனே !!!
-