ஐந்து வயது
வரை மட்டுமே
அனைத்தும்
சாத்தியம்...
அதற்கடுத்த
வயதிலிருந்து
ஒவ்வொன்றும்
அசாத்தியம்...
ஒருவேளை
எல்லா வயதிலும்
சாத்தியப்பட்டாலும்...
அது சாத்தியமில்லை.-
+919342470118
உமக்காக
உம்ம நாட்டிற்காக
உம்ம மொழிக்காக
உம்ம இனத்திற்காக
உம்ம மதத்திற்காக
உம்ம சாதிக்காக
உம்ம உரிமைக்காக
உம்ம உடமைக்காக
உம்ம சுதந்திரத்திற்காக
அவ்வளவேன் ?
உம்ம உயிருக்காக ...
உயிர் நீத்தவரெல்லாம் ,
மீண்டும் உயிர்பெற்று
உம்மிடத்தில் உரிமையும் ,
உயர்பதவியும் கோரினால் ...
நீவீர் என்ன செய்வீர் !?!?-
" இலையானும் "
" நுளம்பியும் "
இவைகளுடன்
" என்னவளும் "
" யானும் "
😍
இடைத்தரகர்களுக்கு
இதெப்படி தெரியும்!?
(இடைத்தரகன் 1967 - 2023)-
சூழ்நிலையை
நினைத்து
கோபப்படுவதினை
விடவும்...
அதனை விட்டு
விலகி இருக்கலாம்...
அதில் தவறு
எதுவுமில்லை!
ஏனெனில்,
தீதும் நன்றும்
பிறர்தரவாரா.-
இறந்து அழுகி மட்கிப்போன
உயிர்குப்பைகளின் மீதுதான்
அந்த காடு செழித்திருக்கின்றது!
அந்த காட்டில் ஆனையோ புலியோ
சிங்கமோ சிறுத்தையோ
மானோ மற்றதோ
எல்லாமும் புகைப்படங்களில்
மட்டுமே புன்னகை
புரிந்துகொண்டிருக்கின்றது!
அழுகிப்போன அழகிய நினைவுகளை
செயற்கை வாயுவை உட்கொள்ளும்
மனிதன் நினைவில் கொள்கிறான்.-
உறவென,
இனமென,
சாதியென,
மதமென,
பணமென
அத்துணையையும்
பூசிக்கொள்ளுங்கள்!
இறுதியாய்!?-
" தவணை " முறையில் " வாழ் " க்கை ,
" சலுகை " " விலை " யில் " நோய் " கள் ,
" இலவசம் " ஆக " மரணம் " .-