~சண்டை~
காதல் கதைத்தல்
ஒரு புள்ளியில்
இரு துருவங்களின்
ஈர்ப்பின் மௌன மாகலாம்-
சாதாரண மனிதன்
இன்மையின் விளிம்பில் விழிகள்
தலையணையோடு தனிமையான
கலந்து உரையாடலின்
தேடல் அவளுக்கானது.
-
வேறேதுமில்லை
தன் நிறைவு
தன் மகிழ்வு
தன் நம்பிக்கை
இப்படி,
தனக்கான
உணர்வுகள் எல்லாம்
தான் சார்ந்தவர்களின்
உணர்வுகளை சார்ந்தே!!-
கதையும் கவிதையும் காதலும்
சேர்ந்தார் போல ஒரு புத்தகத்தை
நம்மிடத்திலே காண்கிறேன்.
வாசிப்பதற்கு
வாழ்க்கை முழுவதையும்
வரம் கேட்கிறேன்.
-
இருட்டினில் ஒலித்த
இச் சென்ற இன்பச் சத்தம்
சட்டென்று பாய்ந்து
என் கண்ணம் அறைந்திட
பொத்தென்று வீழ்ந்தேனடி
என் காதல் வீதியின்
காமத் தரையினிலே!!-
தொலைதூர காதல்,
காதினுள் வாங்கி
கன்னத்திலும்
கண்ட இடத்திலும்
இட்டுக் கொள்கிறது
முத்தத்தை
-
புரிதல்
அனுசரிப்பு
ஏற்புடைமை
இச் சொற்களெல்லாம், என்
அவளிடம் முறையாய்
கல்வி பயின்றனவோ!!,
-
பிறழ்ச்சி
ஒரீரு வார்த்தை பிறழ்வு
ஓராயிரம் உணர்வுகளை தூண்டிட,
சரியோ தவறோ?!
உண்மை,
உன் வாய்ச் சொன்னது
உள்ளுள்ளம் உரைத்தது,
இனி தர்க்கம் வேண்டாம்
இனிதே உறங்குக என,
என் இன்மை
என் காதல் வாங்கிக் கொண்டு
என்னவள் கிளம்பி விட்டாள்
சிவந்த மூக்கோடு
-
நான் : I love you my girl
அவள் : ஆ.. என்ன தீடீர்னு??
நான் : காதலிக்க காரணம் நேரம் தேவையா என்ன?!
அவள் : அப்படி இல்லைங்க, கேட்டேன்.
நான் : ம்ம்ம்.. கேட்டு என்ன உபயோகம்?,
அவள் : மறுபடி, நானும் சொல்லனுமா??
நான் : சொற்பதம் வேண்டாம்,
சிறுபுன்னகை உணர்த்திடும்.!
-
அவள் : அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ்!?
நான் : தாழிட்டுப் பூட்டிட
தடுத்திட இயலுமோ!? என்
அவளும் அப்படி தான்
"அன்பின் வழியது உயிர்நிலை"
-