QUOTES ON #கண்மை

#கண்மை quotes

Trending | Latest
20 FEB 2020 AT 15:10

என் கண்களுக்கு
கண்மை
இட்டுக்
கொள்கிறேன்...
என்
கண்ணுக்குள்ளிருக்கும்
உனக்கு
திருஷ்டிப்
பொட்டாக !!

-


5 SEP 2018 AT 8:41

கரைந்து போனேன்
உன்னைக் கனவினில் தேடியே,
உன் கருவிழிப் புருவத்தில்
தீட்டிட்ட கண் மை
கலைந்து கரைந்ததைப் போல..,

-


5 JUL 2021 AT 20:33

எதிரில் கண் மை
பூசிய ஒரு
கவிதையே நிற்கும் போது!

-


30 MAY 2020 AT 19:58

வெளிப்படாமலும்
இன்னும்,
எழுதப்படாமலும்...
உன் கன்னக்குழிக்குள்
வெட்கங்களாய்...
ஒர் கவிதை சிக்கிக்
கொண்டுள்ளது...💕

-


6 MAY 2021 AT 18:11

விழியின் விளிம்பில் மையல்
கொண்ட.. கார்மேகத் துகள்
அவள்!! கண்மை !!

-


3 MAR 2020 AT 9:02

தேங்கி கிடக்கும் கண்ணீரை
விழ விடாது காக்கும்
லட்சுமன ரேகையே
தாரகை அவள் விழிகளில்
தினம் தீட்டிடும் கண்மை..


-


12 OCT 2019 AT 17:47

மின்வெட்டு பாய்ச்ச
தயாரானவள்
என் கண்களைப்
பார்த்ததும் வந்த
புன்முறுவலால்
நான் மயங்கியது
என்னவோ உண்மைதான்
அவ்வழகுப் புன்னகையால்.

-



பெண்ணே!!
கண்மையை தீட்டுகிறாயா இல்லை
எந்தன் கண்களை திருடுகிறாயா??
உன் கண்களை பார்த்ததில் இருந்து
உன்னை தவிர வேறு ஒன்றும்
தெரியவில்லை!! புரியவில்லை!!

-


28 AUG 2019 AT 20:27

உன் விழிகளின்
பார்வையில் திளைத்த
இதழின் மேல் நின்ற
வார்த்தை யாவும்
தட்டுத்தடுமாறி
தத்தளிக்கிறது
மை பூசிய மான்விழியை
கண்டவுடன்..!

-


15 AUG 2019 AT 18:35

மை பேசுமா
உன் கண்மை பேசுமா
உண்மை பேசுமா

-