தேவை என்று ஒன்று
வரும் நேரம் மட்டும்
தவறாது தென்படுவாய்...-
பெற்றவர்கள் "கடமை"
இனிதாய் நிறைவேறும்..
ஆனால்...
பெண் பிள்ளைகளின்
"கனவுகள்" முதலில் நிலுவையிலும்
பிறகு தூக்கிலும் ஏற்றப்படும்...
-
உன்னை எப்படியாவது
மறந்து விடவேண்டும் என்று
நாளும் நினைக்கிறேன்...
நினைவுகள் பலவாய் பலமாய்
மாறுகிறது, ஏனோ மீண்டும் உன்
நினைவுகளில் சிக்கிக்கொண்டு
நிதர்சனத்தை மறந்தேன்...
மறக்க வேண்டும் என்று
விடாது நினைத்தது தான் மிச்சம்...
முழுதாய் எனை நானே
மறக்கும் முன்னர் உன்
நினைவுகளை நீயே எடுத்துக்கொள்...
இல்லையெனில், மறதியை உன்னிடம்
யாசிக்கிறேன்...வரமாய் அளித்து விடு...-
துளிர்த்து இருக்கையில்
கண்டு கொள்ளாது, காய்ந்து
சருகாகி கீழ் சரிந்த இலைக்கு
பாவம் பார்த்து நீர்
இரைப்பது போல தான் சில
காலம் தாழ்ந்த மன்னிப்புகளும்...
-
காதல் கசந்து
நாட்கள் கடந்தது...
இன்றும் மாறாமல்
கடவு சொல்லாய்
அவன் பெயர்...-
கரை தொட்டு செல்லும் அலைகளாக
காதல் மறந்த உன் நினைவுகள்...
அவை விட்டு சென்ற
நுரையாய் கண்ணீர்...
இதோ! முன் வந்த நுரை
காயுமுன் மற்றுமொரு அலை...
-