தாய் தன் மகளுக்கு
கூற விரும்பும் அறிவுரைகளை
தாலாட்டாய் பாடுவதைப் போல்
ஒரு சிறு முயற்சி-
திருமணம் முடிந்த மகளுக்கு
தாயுமான... தந்தையின்
தாலாட்டு.. 👇👇
(ஏதோ எழுதியிருக்கிறேன்)-
விசுவாசம்
இல்லாதவர்களின்
வீட்டுத்திண்ணையில்
படுத்துறங்கும்
நாய்க்கு
தெரியும்
விரட்டியடிக்கப்படாத
திண்ணை
வீட்டீன்
விசுவாசம்(பாசம்)
எவ்வளவு
என்று.....-
விந்தையாய்ப் பிழைக்க வைக்கும்
விண்ணையும் பிளக்க வைக்கும்
மலையைப் பெயர்க்கும் வெடிமருந்து
பிணியாளியை இரட்சிக்கும் மாமருந்து!..
வாக்குத்தத்தத்தை நம்பச் செய்யும்
பட்டயத்திற்குத் தப்பச் செய்யும்
விழிகளால் காண முடியாதது
விழிகளையே வியக்கச் செய்யும்!...
அக்கினியை அவிக்கும் தண்ணீர்
அதரிசன மானதையும் தரிசிக்கும்
அற்பமான கடுகளவே போதும்
அற்புதம் மலையளவு நிகழ!...
அனைவருக்கும் வேண்டியது சுவாசம்
நீதிமானாகிட தேவை விசுவாசம்
விசுவாசம் இறைவனில் வைத்திடுவோம்
விசேஷமான ஆசிகளைப் பெற்றிடுவோம்!...
- Beryl Asenath
-
விசுவாசம் என்பது,
இன்னும் MGR வாட்ச்
ஓடிக்கொண்டு தான்
இருக்கின்றது என்று
அவர்சமாதியில் காதவச்சி
கேட்ப்பவர்களும் தான்.-
பேட்ட vs விசுவாசம்
°°எனது பார்வையில்°°
பேட்ட : இன்னும் கொஞ்சம் சிறப்பா எடுத்து இருந்துருக்கலாம்.
விசுவாசம் : எடுக்காமலே இருந்திருக்கலாம்-
வாழ்வில் ஒருவன் உச்சத்தை அடைய வேண்டியது எந்த அளவிற்கு முக்கியமோ அதை விட பல மடங்கு முக்கியம் அவன் தான் கடந்து வந்த பாதையை என்றும் மறக்காதிருத்தல்.
-
கல்லறையில் இயேசுவை காண மூன்றாம் நாள் ஸ்திரிகள் சென்றனர்,
இயேசுவின் சரீரம் நாருமே என்று பரிமள தைலம் அவ்விசுவாசத்தில் கொண்டு சென்றனர் ஆனாலோ அங்கு விசுவாசம் வர்த்திக்கும் படியாய் இயேசு அங்கே வந்தார், ஆமென்,
*ஆம் இயேசு விசுவாசம் அற்றவர்களுக்கு விசுவாசம் அருளுகிறவராய் இருக்கிறார்.*-
மனிதர்களின்,
உண்மையான நிறம் அறிந்தும்;
அவர்களுக்கு,
உண்மையாய் இருப்பது;
உன்னதமா இல்லை மடத்தனமா?-