எல்லைகள்
எதுவென்று தெரியாமல்
எல்லாவற்றுக்கும்
அமைதியாக இருந்துவிட்டு
ஏதோ ஒருநாள்
எனக்கான எல்லை இதுவென்றால்
ஏளனமான
நகைப்பே கிட்டும்...-
தமிழால்..வரியால்..
இயற்கையால் இணைந்து மழலையாய் நிறைந்தவள்...
சோழ தேசத... read more
நாம்
உயிர்ப்புடன் இருப்பதை
ஊருக்கு நிரூபித்து
கொண்டே இருக்க
வேண்டியது இல்லை..
நாம் உணர்ந்து
கொண்டால் போதும்...-
உண்மையாக இருந்ததால்
கிடைத்தது
முன்கோபி பட்டம்
ஊமையாக இருந்ததால்
கிடைத்தது
அப்பாவி பட்டம்...
எப்படித்தான்
இருப்பது இங்கு...?!
-
சில நேரங்களில்
வெளியே
ஒரு உலகம் இருக்கிறது
என்பது மறந்தே
போய்விடுகிறது
KG வகுப்பு
ஆசிரியைக்கு..-
வார விடுமுறையா..
அப்படி என்றால் என்ன..?
ஞாயிற்று கிழமைதானே
வேலை பளு அதிகம்..
வாரமாவது
விடுமுறையாவது..-
கலை என்பது
அபூர்வமான வரம்..
அதுவே
பணியாக
கிடைக்கபெற்றது
மாபெரும் வரம்-
மீதம் இருக்கும்
காலங்களில்
எனக்கென்று
அமைந்துவிடாதா
இவர்களாவது..
இவராவது..
இவனாவது..
இதாவது..
முதிர்கன்னி.. 😔
-
அவசரமாக வார்த்தைகளை
அள்ளி வீசி
அடுக்கடுக்காய்
ஆங்காரத்துடன் பேசி
கோபப்பட்டு
கெட்ட பெயர்
வாங்கி கொள்ளும்
பெண்ணின் மனது..
உள்ளுக்குள் உண்மையில்
,'எனக்கான
உரிமையை கொடுத்து விடு'
என கதறிக் கொண்டிருக்கும்..
அதை மறைத்து
வெளிபார்வைக்கு
கோபமாக
தெரிவிக்கபடும்..-
விட்டு விடுதலையாகி
நீங்கி செல்லுமோ
ஒரு முகத்தின்
இரு விழிகளும் தனித்தனியே...?
அப்படித்தானடா
நீயும் நானும்..-
தரையில் சிதறி கிடந்த ரோஜா
மலரிதழ்களை இன்னும் அவள் விரல்கள்
வருடி கொண்டிருந்தன..
அழுதழுது வற்றிபோனது விழிகள்
அவள் மனதை போலவே..
"காட்டுக்கு போனவங்க வர முன்னாடி
வீடு மொத்தம் கழுவணும்.."
மெலிதாக உரையாடல்கள்
அவள் செவியில்..
இனி நான் அவனில்லாதவள்
என்ற எண்ணமே அவள் மனதில்
-