ரொம்ப அழகாகதான் கேட்கின்றாய்,
நீ இல்லாமல் போனால்
நான் என் செய்வேன் என...
அழ தெரிஞ்சும் நான் தான்
இன்னும் முழித்துக்கொண்டே
இருக்கின்றேன்...
எப்படி உன்னை கட்டி புடிச்சி
அழுகுறதுனு..... 😢-
😍காதலை காதலியாக நேசித்து காதலனுக்கு பரிசளிப்பவன்..... எனக்கே.....😘 😜... read more
பார்க்கும் போதெல்லாம்............,
பார்க்கும் போதெல்லாம்
நான் இன்னும்
அந்த நிலவோடுதான்
பேசிக்கொண்டிருக்கின்றேன்.....
என்ன ஒரு சிறு
வித்தியாசம் தான்.......
உன் நிழல் என் மீது
விழுந்திருந்தால்....
நாம்
அந்த நிலவை பார்த்து அல்லவா!?
பேசிக்கொண்டிருப்போம்......💕-
புருவங்கள் யாவையும் உயர்த்தி
தேன் கரும்பை கடிப்பது போல்
உன் தேனுதட்டினை மென்மையாக
கடித்து.....
கண்ணங்கள் யாவும் சிவக்க சிவக்க
அதன் நாணத்தில்
விரல்கள் வீரத்தாளத்தில் எனை நோக்கி பாய...
சில கோவ கணம் கொண்ட
உன் உள்ளுணர்வை உன் காதல் கண்கள்
கொண்டு காட்டி கொடுத்திடவா நீ கூற வேண்டும்....
அடப்போடா...... கிருக்கா.....
கட்டியணைத்து
ஒர் காதல் முத்தமிட்டும் கூறலாமே....
நான் இன்னும் உன்னை நேசிக்கிறேன் என்று.....-
இதோ பூக்கிறது...
மீண்டும் ஓர் மகரந்த சேர்க்கையில்
இன்னொரு பூ......
அன்று கனியாக நீ பறித்து சென்றதை
நான் விதையாக மாற்றி காட்டுகிறேன் என...
என் தாயின் கருவறையில்
நான்.......-
அலகு நடை பயில
அடிபடுமோ என
அலட்சியம் காட்டி.....
தன்குறை கண்டு
புறம் பேசுபவர்களை
தன்னிலை மறவாது
புறம் தள்ளி....
தாம் முன்னேற
தடையாய் இருக்கும்
பல்வேறுபட்ட தீய
கருத்துக்களை
(எண்ணங்களை)
அலட்சியம்
செய்தாலே......
நன்மை சேரும்....-
பசிக்கிறது என்று அழுகிற
குழந்தைக்கு _ நான்
என்னவென்று சொல்லி
சோரூட்டுவேன்.....
இந்த இரவு இப்படியே இருக்காது
என்றா??-
முகவரியில்லா
ஓர் வண்ணத்து பூச்சி
தம் கண்களை
தொலைத்து தேடுகிறதாம்...
எங்கே அவன் என
என்னைப்போலவே
அந்த நிலவும்......
உன் நிழல்
மறையும் நேரத்தில் கூட....-
எப்பா! வேறேதும் சேதி
இருக்கா...?
என்று கேட்கும் போது
உணரவில்லை,
இல்லை என்று கூற...
ஆனால்
பேசிய அழைப்புகள்
துண்டித்த பின்புதான்
உணர்கிறேன்....
தூரம் எவ்வளவு துயரம்
என்பதனை.....
_அம்மாவிடம்......-
தண்ணீர் கொடுத்தே
பழக்கப்பட்ட என்னை
கண்ணீர் விட வைத்தவார்கள் யாரோ
அடி வயிறும் பற்றி எரிகிறது
அம்மா என்று கூறி
அழுதிடும் சிறுபிள்ளையை
அன்பினால் கூட
நனைக்க முடியா
பாவி நானானேனோ.....-