Gokul Suseendran  
333 Followers · 126 Following

read more
Joined 6 November 2017


read more
Joined 6 November 2017
21 JUL AT 10:49

கொடுமையானது
காதலிலும், வாழ்விலும்.
பிடித்தவளின் கரம் பிடிப்பது
எப்போது? காதலில்.
பிடித்ததை செய்து மகிழ்வது
எப்போது? வாழ்வில்.
காதலையும் நாடி,
வாழ்க்கையும் வேண்டி,
தினம் தினம்
காத்திருக்கும் நேரம் தான்
கொடுமையானது.

-


17 JUL AT 11:32

நெஞ்சில் துணிவொன்று வேண்டும்.
விழுந்திடாமல் ஓடும் முயற்சியில்
தோற்றுக்கொண்டே இருந்தாலும்
மனம் சொல்ல வேண்டும்;
மீண்டும் ஒரு முறை.
நினைத்ததை அடையும் வரை
பிடிவாதம் வேண்டும்.
எண்ணம் சரியானால்
வாழ்வில் எல்லாம் வண்ணமே!

-


17 JUL AT 11:01

உன் ஒவ்வொரு
முயற்சியில் கிடைக்கும்,
உனக்கான வெற்றி.

-


15 JUL AT 23:29

கொஞ்சம் சிந்தித்தோம்.
அருகில் வர வெட்கம்;
விலகி செல்ல தயக்கம்.
கண்கள் பேசும் மொழிகள்;
காதில் கேட்கும் கதைகள்.
மௌனம் நிறைந்த நொடிகள்;
அன்பில் இணைந்த இதழ்கள்.
காதல் கொஞ்சம் அலைப்பாய,
இனி உரையாடல் என்பதில்லை.

-


14 JUL AT 13:15

இந்த அதிகாலை வேலையும்
இரவாக தோன்றுகிறது.
அந்த நிலவின் சிறு பகுதி
இப்பூமியில் விழுந்தது போல
உன் புன்னகை,
சிறு புன்னகையில்,
என்னை மயக்கிவிட்டாய்.

-


11 JUL AT 1:31

மதியின் மேல் காதல் கொண்ட, மனம்
மதியின்றி அலையும் அவலம்.
விடியலை தேடி உறங்கிய மனதிற்கு,
மீண்டும் இரவின் மேல் காதல்.
ஓய்வை எதிர்பார்த்த உயிர்களுக்கு
மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே!.

-


11 JUL AT 1:27

சூரியனின் கேள்வி,
"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?"

-


9 JUL AT 0:42

வார்த்தை நானாவேன்.
மேகம் நீயாக,
மழை நானாவேன்.
கடல் நீயாக,
கரை நானாவேன்.
இருள் நீயாக,
ஒளி நானாவேன்.
கோப்பை நீயாக,
தேநீர் நானாவேன்.
உள்ளம் நீயாக,
உயிர் நானாவேன்.
பாதை நீயாக,
வழித்துணையாய் வருவேன் அன்பே!

-


4 JUL AT 12:41

பல அலைகளை கடந்துதான்,
கப்பல் கரை சேர்கிறது.
பயணம் சரியானால்,
இலக்கு தவறாது.
எண்ணம் சரியானால்,
வாழ்க்கை சிதறாது!

-


13 SEP 2024 AT 11:28

ஆசைகள் வெறும் ஆசையாகிட,
கனவுகள் வெறும் கனவாகிட,
முயற்சிகள் ஏதும் இல்லாமல் இல்லை
முயற்சித்த எதுவும் பலனில்லை;
வலிமையை தேடி ஓடும் போது
வலிகள் மட்டும் கண்டதேனோ ?
துணிவோடு போராடும் போது
துன்பங்கள் மட்டும் துணை நிற்பதேனோ?
விடியலை தேடி காத்துநின்றேன்,
விடிந்தபாடில்லை - இப்போது
விடியலை தேடி ஓடுகிறேன் - இனி
விதியின் வேலை.

-


Fetching Gokul Suseendran Quotes