இன்ப மழை பொழிய இல்லறம் மகிழ்வழிய
துன்ப நிலை மாற துயரம் தூள் தூளாக
நித்திரை நிம்மதியாக நிகழ்பவை நல்லவையாக
சித்திரை மலர்ந்தது சுபகிருது பிறந்தது-
தமிழிலக்கணம் தளிரும் தெரி... read more
பணதட்டு பாடு தீரட்டும் - சிவனே
மனகட்டு பாடு வந்தென்னை ஆளட்டும்
பல்லுயிர் நலமாக வாழட்டும் - உன்னை
கைகூப்பி வேண்டிட துன்பங்கரை சேரட்டும்-
காளை அவன் கட்டுடல் கொண்டு
காளை அதன் திமிலை அணைத்து
காதலி போல் கால்கள் பிணைத்து
காட்டுவான் தன் வீரம் ஊர்கே-
அன்று உனக்காக
நிலவை போல் ஆப்பிளை நறுக்க முயற்சித்து
விறல் அறுபட்டு வடிந்த இரத்தத்தில்
மிதந்தது சிவப்பு நிலா-
அல்லுமில்லை பகலுமில்லை
ஆண்டவனை நினைக்கும் நேரம்
கல்லுமில்லை செம்புமில்லை
எம்பெருமான் இருக்கும் இடம்.-
மூளை இல்லாதவனும், பாரில் இல்லாதவனும்
ஆள்கின்ற நம் நாட்டினிலே,
அணுகுண்டு வெடித்தால், அனுதாபம் தேடும்
அறை முட்டாள் மானுடரே !
கோ செய்யும் தவறை, கோபங்கள் கொண்டு
வலைப்பக்கம் நீ பகிர்ந்தால்,
கோவணம் கட்டியே, கோட்டை ஆளும்
ஏழைத்தாய் மகன் நானென்பான்.
ஆட்சி மாற்றங்கள், கட்சி மாறல்கள்
நம் அரசியல் நிலைப்பாடு.
ஐந்தாண்டு வாந்தால், ஐம்பது வாங்கி
பையில் வைப்பது திருவோடு.-
பத்திக்கும் தீ நாக்கால்
பழமை திங்கும் போகிப்போல
தொத்திக்கும் துயரம் எல்லாம்
தொலைதூரம் தொலைந்து போக
தித்திக்கும் பொங்கல் சமைத்து
திகட்டாத இன்பம் சுவைத்து
எத்திக்கும் உங்கள் புகழே
என்றேதான் உலகம் பாட
பிறந்தாள் தைப்பாவை
பருக தருவோம்
பொங்கி வரும்
பொங்கல் பாலை-
நீயும் நானும்
கட்டிக்கொள்ளும்
போதெல்லாம்
முத்தமிட்டு கொள்கின்றன
நம் சிறு தொப்பைகள்-
திர்ப்தியாய் சாப்பிட்ட பிறகு
இருவரும் ஒன்றாய் கை கழுகையில்
இருவருக்கும் பசி எடுக்கிறது உடலில்
காதலை பரிமாறி கொண்டது இதழில்
-
உனது பின்னங்கழுந்து கேச சுருளுக்குள்
சிக்கி கொண்டது என் பட்டாம்பூச்சி-