குத்தியது முள்
மலரை பறித்த போது
கோபத்தில் நான்...
இதழ் நிறைய புன்னகையோடு
புரையேற்றியபடி கேட்கிறது
வேறு எப்படித்தான்
நான் உன்னிடம் பேசுவது என்று...!!!
🌹மலரே பேசு மெளன மொழி🌹-
நீ நேசிக்கும் எவரும்
உன்னோடு வரமாட்டார்கள்
ஆனால்.....
உன்னை நேசிக்கும் ஒருவன்
உனக்காக காத்திருப்பான்!!!-
உங்களை அவமானப்படுத்த
ஒருவர் விரும்பினால்
முதலில் நீங்கள் அவர்களை மதித்திருக்கவேண்டும்...!!
-
தூக்கமில்லா என் இரவை
தின்று கொழுத்துப்போகும்
உன் நிழலாடும்
நினைவுகளுக்கோ
ஆயுள் அதிகம் தான் போல....??!!-
ஒரு புத்தகத்தை
தொடுகிற போது
நீ ஓர் அனுபவத்தை
தொடுகிறாய்...!
எப்போதும் வாசி!
புத்தகங்களை நேசி!!
✍🏻சேகுவாரா-
யாரையும்
காயப்படு்த்தி விடக்கூடாது
என்பதற்கான
ஒரு விலகுதல் உடனிருந்து
நேசிப்பதை காட்டிலும்
அழகானது...!-
மனபலத்தை விட
பணபலம் தான்
பெரும்பாலான
இதயங்களை
ந(சு)யமுடன்
பேச வைக்கிறது...!!
இதில் மேலென்ன
கீழென்ன
நானென்ன
நீயென்ன
அடப்போடா போ...
நேர்மை என்பது இந்தப்
பாழாய்ப்போன மனிதர்களித்தில்
ஒரு கூந்தலுக்கும் உதவாது..!!-
ஏமாற்றிவிட்டார்கள் என
புலம்பாதீர்கள்...
எமோஜி முத்தங்களில்
ஈரத்தை தேடியது
யார் தவறு....??!!-
பழகுபவர்கள்
தந்து விட்டுப்போகும்
பரிசு வலியாக இருக்கலாம்....
அதுவே உன் வாழ்வில்
அடுத்த நினைக்குச் செல்லும்
வழியாகவும் இருக்கலாம்!!!
எல்லாம் அவன் செயல்!-