திருமணம் முடிந்த சில கணம்
மகளாக அழுதவள்..
மறுகணம்
மருமகளாக சிரிக்கிறாள்...
புகுந்தவீட்டில் அடிஎடுத்து வைத்ததும்.
-
இளமையில்
தான் அனுபவித்ததை
எல்லாம்
முதுமையில்
தன் மருமகளுக்கு
திருப்பிக் கொடுக்கிறார்கள்
சில மாமியார்கள் !!-
கணவன்
இருக்கும்
போது ஒரு
விதமாகவும்...
இல்லாத
போது ஒரு
விதமாகவும்...
மனைவி
என்கிற
மருமகள்கள்
செய்வது
சரியென்றால்
இதுவும் சரியே...💕-
நின்றால் குற்றம்! நடந்தால் குற்றம்!!
மாமியார் மருமகளிடையே மட்டுமல்ல!!!
"காதலிடமும் காதலியிடமும்தான்".
© நிலானி ®-
கொஞ்சும் மழலையின்
அழகில்..!
கதிரவனை பார்த்த
மொட்டுக்களை
போல் சிரிக்க
கண்டேன்...!
வண்ணத்து பூச்சியை
போல் வண்ணமிட்டு
சிட்டாய் பறக்க கண்டேன்...!
நான் என்றும் பார்த்திறாத
வர்ணம் பூசிய நிலவு
என்னிடம் கொஞ்சி விளையாட
கண்டேன்.
-
பெண் பார்க்க வேண்டும் தோழி..
நம் இயற்கைநேசன் தருணிற்கு..
பெண் பார்க்க வேண்டும் தோழி..
அன்பின் அதியனிவன்
ஆளுமையில் ஆதவன்
இன்சொல் இனியனிவன்
ஈந்தளிக்கும் கர்ணனிவன்
உவகையூட்டும் உத்தமன்
ஊர் மெச்சும் பிள்ளையே
எளிமையின் எதார்த்தன்
ஏந்தெழில் ஏகபாவனிவன்
ஐயிருவட்டமாக இருப்பன்
ஒட்பத்தின் சுடரோனிவன்
ஓர்மை பண்புடையான்
ஔசித்தியம் கொண்டவன்
இந்திரனும் தோற்று நிற்பான்
இவன் அகவழகில் மயங்கி..
அவன் மனதிற்கினிய மங்கையைத் தேர்ந்தெடு
மனையறம் போற்றும் மணப்பெண் பார்த்திடு
இல்லறம் போற்றும் இனியவளைத் தேர்ந்தெடு
-
மருமகள் என்றும் 'மறு' மகளாவதில்லை. மருமகள் என்பது பெயரளவில் மட்டுமே. அவளை என்றும் மகளாக அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவளுக்கு மரியாதை தரவேண்டாம் அவளும் சக மனிஷி என நினைத்தால் போதும்.
இதில் விதிவிலக்குகளும் உண்டு. அவர்களை நான் குறிப்பிடவில்லை.
-
மருமகள் என்பவள்
சுவற்றில் அடிக்கப்பட்ட
பந்து போல
பிறந்த வீட்டிற்கு சென்றதும்
திரும்பி விட வேண்டும்
அதே வீட்டின் மகள்
என்பவள் கிணற்றில்
போட்ட கல் போல
தாய் வீட்டில்
நிரந்தரமாக கூட
இருக்கலாம் 🙄...
-