பசி அறிந்த நட்பு
-
இளையராசா பத்தி ஊர... read more
வீணையின் தந்திகளை
நீ மீட்ட....மீட்ட
நாதம் என் நாடி நரம்புகளில்
மடைமாற்றம் செய்யப்படுகிறது
இந்த லயத்தில் மயங்கும்
எனை கடைத்தேற்ற
வளைகரங்களுக்கு மட்டுமே
வலுவிருக்கிறது ❤️-
கற்பனைகளில் சஞ்சாரம்
கொள்ளும் மனது....
நிஜங்கள் சுடும் போது
வேதனையை மறைத்துக்
கொள்ளும் யாரும் அறியாமல்-
நினைவில் இருக்கும்
நிஜங்கள் தொடர்ந்து வரும்...
நமக்காக காத்திருக்கும்
நமக்கான சொந்தம்
யாரென்பது புரியும்!-
சொல்லொணா
கவலைகள்
இருந்தாலென்ன.....
சொல்லி மாளாத
வேதனைகள்
வந்தாலென்ன....
தேனில் நனைந்த
மலர்களாக நிதம்
உன் தரிசனம்
இதுவே வரம்!-
எதிர்பாரா விதத்தில்
எதிர்பாரா நடப்புகள்
நடந்தேறினால் தான்
வாழ்வும் ருசிக்கும்❤️-
மட்டும் போதும்
குறைகின்ற
ஆயுளும் நீளும்...
தெவிட்டாத ஆசை
என்றும் வேண்டும்
அதன் பயனால்
இனிக்கும்
வாழ்வு போதும்!-
நீயோ வெட்கத்தில் துடிக்கும்
அதரங்களை மறைக்கிறாய்..
நானோ நடனமாடும்
விரல்களை
பற்றத்துடிக்கிறேன்....
விரல்களை தாண்டி
இதழ்களில் கதையெழுத
சொல்கிறது காதல்.....-