சின்னஞ்சிறு
வயிற்றின்
பசியடங்க
சிதறிவிழும்
தானியம்
போதுமானது
அருள் புரிவாரா
அன்னபூரணி தாயார்...-
அன்பினை விதைக்கத் தவறி
அனாதையான சிலர்
அதீத அன்பினை காட்டி
அனாதையான சிலர்
ஏற்றிவிடும் ஏணியாக இருந்து
நல்ல நிலைமைக்கு
வந்தவுடன் எட்டி உதைக்கப்பட்டு
அனாதையானோர் சிலர்
ஏமாளியாக இருந்து
சொத்துகளையெல்லாம்
பிள்ளைகளுக்கு மாற்றி வைத்து
தனக்கென ஒன்றுமில்லாமல்
கைவிடப்பட்ட
நிலையில்
அனாதையானோர் சிலர்
இப்படி இவர்களின் பட்டியல்
நீண்டு கொண்டே தான்
செல்லும் அளவோடு ஆசைகளை
வளர்த்துக் கொள்ளாத வரையில்...-
உண்மையான நேசம்
ஒரு போதும்
மரித்து போவதில்லை
சூழ்நிலையால்
சேராமல் போனாலும்
மனதின்
ஒரு மூலையில்
என்றென்றும்
உயிரோடு
வாழ்ந்து கொண்டு தான்
இருக்கும்...-
மறக்காமல் இருக்கவே
குறிப்புகளை எழுதப்
பழகிக் கொண்டேன்
இப்போது மறந்து விட்டேன்
குறிப்புகள் அடங்கிய
நாளேட்டினை
எங்கே வைத்தேனென்று ...
-
இதயம் சுமந்த
காதலுக்கு
உதயமானது
கதிர்களின்
மூலமாக தனது
ஆதரவுக் கரங்களை
நீட்டி பிரகாசித்து
மகிழ்விக்கிறது...-
இழுத்துப் பிடிக்க
நினைத்தால்
ஒரேயடியாக
அற்றுப் போய்விடும்
பாசமானது
சற்றே
தள்ளிச் சென்றால்
ஒட்டிக் கொண்டாவது
இருக்கும்...
-
அடக்கடவுளே
வெட்டிங் ஷீட்டுன்னு
சொன்னவுடனே
சரி ஏதோ ரொமாண்டிக்கா
எடுக்கப் போறாங்கன்னு வந்தா
கடைசியில இப்படி முந்தானைய
ஏந்தி நிக்க வச்சுட்டாங்களே
ஒரே வெட்கமா போச்சு...
-