QUOTES ON #போராளி

#போராளி quotes

Trending | Latest
9 DEC 2018 AT 14:02

அம்மா உன் பிள்ளை
உயிரோடு இல்லை என்று
கலங்காதே....
மறுபடியும் உன் மகனாய்
பிறந்திட வேண்டும்
மறுபடியும் மண் மகனாய்
இறந்திட வேண்டும்

-


14 JUN 2021 AT 16:37

அர்ஜென்டினாவின் அற்புதமே
வரையறைக்கு அடங்கா ஓர்
சாகாப்தம் நீ...
புரட்சியின் பேராற்றலே !
நீ எரித்த ஏகாதிபத்தியத்தில்
சுதந்திர சுவாசம் இன்று
கியூபாவிற்கு....
யுவேர யுத்தம் யுகம் மறவாது...
மனிதம் பேசிய மானுடமே
மரிக்கவோ மறக்கவோ
நீ உரு அல்ல. . .
ஓர் உணர்வு !
# சே🔥

-


10 JAN 2020 AT 23:37

வீழ்ந்து
எழுகின்றேன்,
நான்
வீரனல்ல,
கோழையுமல்ல,
போராளி...
போராடுவேன்
இறுதிவரை...

-


10 MAR 2019 AT 9:12

குறிப்பிட்ட சாதியினரை
இழித்துப்பேசினால்
பெறலாம் போராளி அங்கீகாரம்

-



வாழ்க்கையில் போராடி வெல்பவர்கள்...

வாழ்க்கைகாக போராடியே மரணிப்பவர்கள்...

-


12 JUL 2020 AT 8:38

போராளி பெண்
(தொடர்கதை)
பாகம் - 1

👇
(வரிகள் கீழே)

-


4 MAY 2019 AT 12:50

தன்‌ பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு வந்து

வாய் கிழிய பேசுகிறான்
சமத்துவத்தையும்/ சாதி ஒழிப்பையும் பற்றி...‌ அந்த இணைய போராளி.

-


18 JUN 2021 AT 2:56

முட்டி
மோதிக்கொண்டிருக்கும்
இந்த உலகின்
ஏதோ ஓர்
மூலையில்
முன்னேற
துடிக்கும்
சமூக போராளிகளே
நீயும் நானும்...

-


2 FEB 2019 AT 22:18

போராளிகள் அறிவதில்லை!
பச்சோந்திகளால் - நாம்
நரபலியாவோமென்று!

போராளிகள் அறிவதில்லை
கடைசி வரை - நாம்
போராட மட்டுமே செய்வோமென்று!

போராளிகள் அறிவதில்லை!
சிலர் பொழுதுபோக்குக்கு - நாம்
துணை போவோமென்று!

போராளிகள் அறிவதில்லை!
வீரமெல்லாம் சோர்ந்து போகும் - துரோகம்
மட்டுமே சார்ந்து வாழுமென்று!

-


3 SEP 2021 AT 22:42

காலமெனும் வீரனிடம் தோற்காத
ஒரே போராளி காதல்!

-