பெருநோக்கமெல்லாம் அல்ல
அவ்வப்போதான
சிற்றின்பங்கள் போதும்
இவ்வாழ்வை கொண்டாடி
தீர்க்க. . . !-
வீதியோரம் திரியும்
விலாசமற்ற தேவதை அவள்...
யாருக்கோ பிடிக்காமல்
தூக்கி எறிந்த ஆடையிலும்
அத்துணை அழகு அவள் !
பசியில் பரிதவித்திருந்தது அந்த
பிஞ்சு முகம்
ஆடிக்காரில் கடந்து சென்றோர்
கெட்டு போனதாய்
விட்டெரிந்த பொட்டலத்தை பிரித்து
பசியில் ஓலமிட்ட வயிற்றை
அரைகுறையாக அவள்
நிரப்பியது கண்டதும்
விசாரணை குற்றவாளி ஆகிவிட்டேன் !
மனசாட்சியின் முன். . .
நேற்று வேண்டாமென வீணடித்த
அந்த ஒருகவள உணவை எண்ணி...
_பாலைவனத்து_பூ
-
நேற்றைய சண்டைகளுக்குள்ளும்
நாளைய அன்புகளுக்குள்ளும்
பிரியாது பிணைத்து வைத்துள்ளது
இன்றைய பிரியங்கள்...!
-
வேறென்ன
செய்து விடப்போகிறது ?
அத்திசை மாறிய உரையாடல்கள்
சீரடித்த இவ்விதயத்தை
மறுபடியுமாய் ஒருமுறை
மரணிக்க காத்திருக்கும்
வெறுமை காலங்களில்...
-
தொலைந்த என் நிழல்
தேடப்பட
போவதில்லை
என் மௌனம் இனி
பெரும்பொருட்டாகப் போவதில்லை
மரித்த என் வார்த்தைகளுக்குள்
மறைத்து கொண்டேன்
என்னை நானே. . .
-
இறுதி
நம்பிக்கையாய்
எஞ்சிஇருந்த
கனவுப் பூ ஒன்றும்
சருகாகி சாம்பலாகிற்று. . .
அப்புறப்படுத்தப்பட்டு
அகன்று போன
அலட்சியபார்வை ஒன்றில் !-
கடைவிழி கருமையில்
தொடங்கி
கன்னம் உரசிட்ட கார்குழலோ
குறும்போடான குறுநகையோ
அத்தனையும் பேரழகாகின்
என்னை உனக்கு
பித்தனாக்கியதன் பெரும்பங்கு
இப்பாதங்களுகே 👣🖤✨-
காவலர் இல்லா எல்லை வரட்டும்
மதவெறி தின்று மனிதம் வாழும் நாள் வரட்டும்
அணு ஆயுதம் அடையாளம் இளக்கட்டும்
அடுத்த தேசத்தொடு அடித்துகொள்ளா நாள் வரட்டும்
உயிர்போகாமல் உரிமைகள் கிடைக்கட்டும்
ஆணவக்கொலைகள் அரங்கேராத நாள் வரட்டும்
வறுமை கொஞ்சம்
வழுவிலகட்டும்
விவசாயி தூக்கிலிடப்படா
நாள் வரட்டும்
கல்வி கட்டாயமாக்கபடட்டும்
பெண்ணொருவள் சுதந்திரமாக நடமாடும்
நாள் வரட்டும்
அன்று கொண்டாடுவோம் சுதந்திர தினத்தை
அதுவரையில்
சுதந்திரபோராளிகளை கொண்டாடுவோம் !
@paalaivanaththu_poo
-
திமிறிக்கொண்டிருக்கும்
இதயத்துக்கு
பின்னால்
தீரா வலிகள்
ஓலம் இசைத்து
கொண்டுள்ளது !
சில மொழி
பெயர்க்கப்படா
மௌனங்களினால்...
-