மனிதனாய் இருக்க
முடியாதவர்கள்
கடவுளை தேடி
கோவிலுக்கு செல்கின்றனர்...
மனிதனை உணர்ந்தவன்
கடவுளாகவே வாழ்கிறான்...-
வேண்டப்படும் யாவும்
கடவுளால் கொடுப்பதில்லை,
மனிதர்களே கடவுளாய்
மாறுங்கள்...
-
நீங்கள் யாரும்
அறியாத வேளையில்
யாருமில்லா இடத்தில்
ஆண் தனது
சோகங்களை
கண்ணீரால் ஆற்றிக்கொண்டிருப்பான்...-
சற்றும் எதிர்பார்க்கவில்லை,
உன்னை ஊருக்கு அனுப்பி வைத்த பின்...
எளிமை தான்,
பாத்திரங்கள் கழுவி உள்ளன.
எளிமை தான்,
அழுக்குதுணி எதுவும் இல்லை.
எளிமை தான்,
வீட்டு சுத்தமாக உள்ளது.
எளிமை தான்,
இரண்டு நாளில் உன்னை தேடி ஊருக்கு வந்துவிடுவேன்.
எளிமை தான்,
நானாக இந்த பாய் விரித்து விடுவேன்.
ஆனாலும் விவரிக்க முடியவில்லை
நீ இல்லாமல் நான் மட்டும் தனியாக இந்த இரவை கடப்பது...-
பல மணி நேர
போராட்டங்களுக்கு பின்
அவர்கள் நிம்மதியுடன்
உறங்க சென்றுவிட்டனர்...
அவர்களுக்காக கண்
விழித்து அந்த வேலையை
முடித்த அவனுக்கு
அந்த நாள்
"சிவராத்திரியாய்"
முடிந்தது....-
சமூக நீதி
என்பது
நடுநிலை
என்பதை
தாண்டி
ஒடுக்கப்பட்டவர்கள்
பக்கம் நிற்பதே...-
யாராலும்
புரிந்து கொள்ளப்படவில்லை...
ஒரு அதீத கோபம்,
இனி உங்களால்
எந்த காலத்திலும்
என் நம்பிக்கையை
பெற்றுவிட முடியாது...-
எல்லோருக்கும்
கிடைக்கும்
சமநீதியை
நான்
விட்டுகொடுத்தால்தான்
நீங்கள்
என்னை நல்லவன் என்று
ஏற்றுக்கொள்வீர்களானால்,
தேவையில்லை,
நான் திமிர் பிடித்தவனாகவே
இருந்துவிட்டு போகிறேன்...-
மனிதன் கண்டுபிடிப்பில்
மகத்தானது புத்தகங்கள் தான்,
அதை எளிதாக
வெறுக்க வைப்பது
பெற்றோர்கள் தான்...
-
வழக்கம் போல்
தூக்கம் வராமல்
மெனக்கெட்டு தூங்கி
காலை சற்று
தாமதமாக முழிப்பு
வர வேண்டும்...
அவ்வளவு தான்
இந்த புத்தாண்டு
கொண்டாட்டம்...-