காற்றையும் சிறை வைக்கும்
கபட நாடகம் அறிந்தது நெகிழி-
நெகிழியை விழுங்கியதோ
தன் நிறத்தை காவு கொடுத்து விட்டு
விழி பிதுங்கும் மீன்-
நெகிழியைப் பயன்பாட்டில்
இருந்து தூக்கி எறிவோம் என
எழுதப்பட்டிருந்த தாள் இறுதியில்
தூக்கி எறியப்பட்டது
பிளாஸ்டிக் குப்பைத்தொட்டியில் ...-
நெகிழி என்னும் புடவையை எனக்குக்
கட்டி அழகு பார்ப்பவர்களே ! ஏனோ
நான் அழுவதை பார்க்க மட்டும்
மறந்து (மறுத்து) வீட்டீர்களா?...
இப்படிக்கு
பூமி......
-
காற்றின்
திசையொடு
இலக்கின்றி
பறக்கும்
நெகிழியாக
உன்னிருப்பை
சுற்றி நகரும்
என் மனதைக்
குப்பையிலெறிய
வேண்டியேனும்
தீண்டிவிடு
ஒரு முறையாவது...!-
மக்காதாம் நெகிழி
மண்ணுக்குள்ளே-அதனால்
மழைநீரும் புகாதாம்
நிலத்தின் உள்ளே- இதை
அறிந்த மானிடரும்
உணரவில்லை- அதனால்
நாளும் பெருகுதாம் நெகிழி
பாருக்குள்ளே
விழிப்புணர்வு சுவரொட்டியும்
படித்துவிட்டு மறுநாள்
நெகிழி பையில் பொருட்கள்
வாங்கிடும் பேதைகளை
என்னென்று சொல்வது
தெரியவில்லை????
-
என்னதான்
குப்பையில் இட்டு
தீ வைத்தாலும்
நெகிழிப்பை போல
மக்காமல் இருக்கிறது
இந்தக்காதல் என்பது !!-
நெகிழி அரிசி
வந்தாயிற்று
நெகிழி பூ கூட
கவிதையில்
இடம்பெற்றது
சரிதான்
நெகிழி பூ
வைத்து
கடவுளை
தொழும்
நிலை வராது
பார்த்து கொள்வோம்
கடவுள் பாவம்-