செர்ரி பூக்கள் உதிர்ந்திருக்கும்
சாலை அழகுதான்...
ஆனாலும் அது கிளையினை பிரிந்து
உதிரும் காலம் கனமானது.
உதிர்ந்த காலங்கள் அழகு...
உதிர்ந்துகொண்டிருக்கும் காலம் ரணம்...
- மார்ஷல் ❤-
ஒரு நத்தை தன் வீட்டை தூக்கிக்கொண்டு போ... read more
எங்கெங்கோ காயப்பட்டு
முறிந்த சிறகுகளோடு
மீண்டும் என் பாதையை
நோக்கி வருகிறாய்...
நீயே சொல்..
உன்னை அணைப்பதா..?
தடுப்பதா...?-
உனது பெயர்
பிரபஞ்சத்தின் குரல்..
நான் எங்கே இருப்பினும்
எனக்கு மட்டும் கேட்கும்படி
ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
இனி நான் நிம்மதியாக
உறங்குவேன்
என் கல்லறையில்.-
உன்னை எப்பொழுதும்
காதலித்துக்கொண்டே
இருக்கவேண்டும்..
எப்பொழுதுமென்றால்
நீயெனக்கென
இல்லாமல் போன பின்பும்.
-
வெளிக்காட்டாமல்
விடப்பட்ட அன்பை
காலத்துக்கும் சுமக்க வேண்டும்.
அது இளைப்பாற கூடற்று
அலைந்து திரியும் பறவைப்போல்
அலைமோதும் காலத்துக்கும்
நெஞ்சினுள்.-
எல்லாமுமாய் ஒருத்தியை
நேசிக்கமுயலும்போது
இந்த உலகம் மிகச்சிறியதாய் சுருங்கி
அவளுக்குள் நிரம்பிப்போவதை
நீயே காண்பாய்.
-
உன்னை சந்திக்காமலே இருந்திருக்கலாம் என்று
மனம்வெதும்பி எந்த பெண்ணிடம் சொல்கிறாயோ
அவளிடம் முழுமையாய் நீ நிரம்பியிருக்கிறாய்.
விடுதலையை விரும்பாத ஒரு கைதியை போல
தஞ்சமடைந்து கிடக்கிறாய்.
அந்த அன்பின் பிரகாசத்தில்
உன்னை நீயே அடையாளம் காண்கிறாய்.
அவளிடமிருந்துதான் எல்லாவற்றையும்
நீ கற்றுக்கொள்கிறாய்
காதலையும் கூட...-
இந்த உலகில்
காவியமாய் படைக்கப்பட்ட
அத்தனை காதல்களும்...
கண்ணீரால் எழுதப்பட்டவையாகவே இருக்கிறது.
கண்ணீரால் எழுதப்பட்ட
அத்தனை காதல்களும்
வலிநிரம்பியதாகவே இருக்கிறது.
-
இது காதல் என்று அறியமுடியாத வயதில்
காதல் தோன்றிவிடுகிறது நமக்குள்.
இது காதல் தானோ என்று எண்ணும் காலத்தில்
இது காதல் அல்ல...
வெறும் பாலின ஈர்ப்பு தான்...
பருவத்தில் வரும் கிளர்ச்சி
என்று அறிவுறுத்தப்படுகிறது.
இது காதல் அல்லவே?
என்று ஏற்றுக் கொள்ளும் காலத்தில்
அது காதலாகவே இருக்கிறது.-
உன்னோடு பேசிக்கொண்டிருக்கையில்
எனையறியாமல் உன் விரல்களை பிடித்துக்கொண்டேன்.
சட்டென்று விரல்களை இழுத்துக்கொண்டு முறைத்தாய்....
கொஞ்சம் காயப்பட்டுவிட்டேன்.
உன்னை நீண்ட நேரம் கட்டியணைத்துக் கொள்ளவும்.....
இதழ்களால் உன் கன்னத்தில் ஓவியம் வரையவும்...
உன் விரல்கள் கோர்த்தபடி திரியவும்...
உன் மார்பில் புதைந்து சாகவும்
தவம்கிடக்கிறேன் வெகுநாளாய்...
இதை வெறும் காமமென்றோ..
உடல் சார்ந்த விருப்பமென்றோ தவறாக எண்ணிவிடாதே..
இவையெல்லாம் பூரண அன்பின் பரிதவிப்புகள்.-