மகிழ் வேந்தன்   (மகிழ்)
557 Followers · 570 Following

read more
Joined 1 September 2018


read more
Joined 1 September 2018

தெரிந்தே தவறவிடப்படும்
சில அழைப்புகள்
தவறிய அழைப்புகளில் சேராது

-



யாவரும் உறங்கிய வேளையில்
சலனமில்லாமல் பெய்கிறது மழை...
தாழிட்ட‌ அறையில்
ரகசியமாய் அழும் பெண்ணைப் போல

-



கறைகள் இருந்தாலும்
தேய்ந்து போனாலும்
முழுநிலவை ரசிக்காமல் யாரும் இல்லை..
குறைகளை களைந்து
ரசிக்க பழகுங்கள்..
மனிதர்கள் அவ்வளவு அழகு

-



பண்டிகையின் வாசம் அகலாத
மறுநாள் காலைப்பொழுதில்
வேலைக்காக ஓடுவதில் புரியத் துவங்குகிறது
வாழ்வின் எதார்த்தம்

-



சிறகடிக்கும் பட்டாம்பூச்சி போல
சில உறவுகள்
நிரந்தரமாய் தங்கிவிடுவதில்லை.
வண்ணமயமான நினைவுகளை
தந்து செல்கின்றனர்..

-



தோன்றும் புன்னகைக்கு
என்ன விலை கொடுத்தாலும்
ஈடாகாது

-



எத்தனைமுறை படித்தாலும்
விளங்கவில்லை,
இந்த மனிதர்களை படிக்கையில்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்

-



கேட்டு சலிப்படைந்து
யாரும் கவனியாத வேளையில்
சோர்ந்து கண்ணயரும் யாசகனின்
பிச்சைப் பாத்திரத்தில்
தன் பங்கிற்கு
வாரி இறைத்தது
மழை

-



கிடைத்தாய் நீ..
என்னால் நம்ப முடியாத
அதிசயங்கள் அத்தனையும்
உன் கண்ணசைவில்
நிகழ்த்திகாட்டினாய்..
என் வாழ்விற்கு
புது அர்த்தம் தந்தாய்..
அருகே இல்லாவிட்டாலும்
தொலைந்து விடாதே

-



காரணங்கள் ஏதுமில்லையெனினும்
யாருமில்லா இரவுகளில்
துணையிருக்கிறது
கண்ணீரும் தனிமையும்

-


Fetching மகிழ் வேந்தன் Quotes