பேறுகாலம்
நெருங்க நெருங்க..
நொறுங்கிவிடும்
மனைவிக்கு..
இவன் இன்னும்
நெருங்க நெருங்கி
வந்து தேற்றுவான்..
வலியெடுக்கையிலே
இதழ்வரிகளால்
இதமாய் மருந்திட்டு
ஆற்றுவான்..
சீமந்தம் முடிந்து
வாரிசு என்னும் சீதனம்
சுமந்து வரும் சுந்தரியிவள்
வாழும் வீடு சொர்க்கமே..!!
- இளங்கவி ஷாலினி கணேசன்-
கண்மணி கண்ணே
பொன்மணி பொன்னே-என்
தாய்வீட்டு சீதனத்தை பாரடி
தாங்காது நம்ம வீடும்
அல்லிப்பூ செண்டுக்கு
அட்டிகையாம் பாரம்மா
ஆவாரம்பூவுக்கு
ஆணைபொம்மை பாரம்மா
இலவம்பூவழிக்கு
இலவம்பஞ்சு அணையாம்
உந்தூழ் மலருக்கு
உரசுமருந்த பாரம்மா
எருவை மலருக்கு
எழுத்தாணியை பாரம்மா
ஐவணை மலருக்கு
ஐஞ்சுவகை மருந்தாமே
கண்ணி மலரழகி
கண்ணாடி பாரம்மா👇👇
-
சீதனம் கொண்டுவந்திருக்கிறேன்
கதவு திறவுங்கள்
யன்னலாவது திறந்திடுங்கள்
உள்ளே என் குழந்தை அழுகிறாள்
பெண்ணாக பிறந்தேன்
அழகுசேர்அறிவுக்கு அடையாளமுமானேன்
அறியவில்லை நான் பேதை
மணப்பெண்ணாக மற்றொன்றும் வேண்டுமாமே!!
மாப்பிள்ளை விற்றனர்
மங்கல வாத்தியங்களுடன்
பொய்த்தது சீதன ஒப்பந்தம்
வாடிக்கையானது வடுக்கள் தினம்
என்றாலும் தவறவில்லை தாம்பத்யம்
பயன் முடிந்த பொருளென
வீதியில் வீசப்பட்ட நான் இன்று
சீதனம் கொணர்ந்தாலொழிய
நீடிக்காதாம் உறவு
செலுத்திவிடுகிறேன் தவணைமுறையில்
சற்றே கதவு திறந்திடுங்கள்
பெற்றதும் பெண்ணாகிப்போனது
அவளுக்கும் செல்வம் தேடிடல் வேண்டும்
காலம் கரைகிறது
கதவு திறவுங்கள்.....
-
கட்டிய மனைவியை கடன்காரி என
பெற்றவனிடம் அனுப்புது சில வர்க்கம்
சீதனம் எனும் சொல்லுக்கு உயிரூட்டி
பெண்ணியத்தை (கருவறுக்க) விலை பேச-
குயிலிசையில் இனிமையின் ஜனனம்!
அந்தியில் பொன் ஒளியின் தகனம்!
சூழும் முகிலால் மழை என்னும் சீதனம்!
மடியும் கனாக்களால் மனதினுள் சலனம்!
என இன்ப துன்பங்களை ஏற்குமோ உன் வதனம்???-
கட்டிய மனைவியிடம்
கறந்த வரதட்சணையால்
காரில் கோடீஸ்வரனாக
கொட்டமடிக்கிறான்
கையாலாகாதவன்.
-
எல்லாம்
உள்ளவனுக்கு
ஒன்றும்
இல்லாதவள்
போடும்,
பிச்சை...
-'சீதனம்'-
-
உழைத்து
சொந்தக்காலில் நிற்க
முதுகுஎலும்பு இல்லாத
ஆண்கள்
கேட்கும் பிச்சையே
சீதனம்-
மணக்கூலி
என்ன கொண்டு வந்தாய்
என்று கேட்கும்
ஆண் சமூகத்திடம்
என்ன கொடுத்து
அழைத்து வந்தாய்
என்று கேட்பது
முறையல்லவோ?-