எல்லாம்
உள்ளவனுக்கு
ஒன்றும்
இல்லாதவள்
போடும்,
பிச்சை...
-'சீதனம்'-
-
• praneetha_nanthagobal - instagram
•பேதை ஒருவளின் பேனைக் கிறுக்கல்கள்
•சுதந்... read more
கொடுப்பதில்
மட்டும்
இன்பம்
என்று
யார் சொன்னது...
அவளிடம்
ஆயிரம் முறை
கெஞ்சி
ஒன்று
பெறுவதில்...
கொட்டிக் கிடக்கிறதே
பேரின்பம்
மொத்தமும்.
- முத்தம்--
நிராகரிப்புகளுக்கு பயந்தே
நிஜங்களாக்கப்படாது,
நிறைய காதல்கள்...
நினைவுகளோடு மட்டும்
நிறுத்தி வைக்கப்படுகின்றன.-
நீ மட்டும் நினைவுகளாக
இருக்க பிடிக்குமே
தவிர...
நினைவுகளாக மட்டும் நீ
இருக்கப் பிடிக்காது.-
சிலரின் ...
தெரிவுகளில் ஒன்றாக
இல்லாமல்...
தேவைகளில் ஒன்றாக
வாழ்வதே ...
'காதலின் இன்பம்'.-
"என்ன கொஞ்ச நாளா
ஆளயே காணோம்"
எனும் வார்த்தைகளால்
மட்டுமே - இன்னும்
பிழைத்துக்கொண்டு
இருக்கிறது ...
'அவளது காதல்'.-
பெண்பிள்ளை இல்லாத வீடு
என்றால் புருவத்தை உயர்த்துவதும்
ஆண்பிள்ளை இல்லாத வீடு
என்றால் வாயை நெளிப்பதும்
சமூகத்தில் சகஜம் தானே.-
தள்ளாடும் கிளைகளுக்கு
மட்டுமே தெரியும்...
அவளது வாசம் கலந்த
மாருதம் குடித்த போதை
என்று...-
பெண்ணென்று ஒருத்தி இருந்தாள்
உடலுடன் சேர்த்து - ஆடவனின்
உணர்ச்சியையும் மறைத்துவிட
உடுத்திக்கொள்வாள்...
கொலுசின் மணிகளுக்கு வலிக்காத
நடையின் நளினத்தை
பேணிக்கொள்வாள்...
வெட்கமும் மஞ்சளும் குழைத்து
காயம் முழுவதும்
பூசிக்கொள்வாள்...
குரலின் மென்மையை
மௌனத்தில் தீட்டி மேலும் மென்மை
செய்துகொள்வாள்...
அடுத்தவன் அருந்தினாலும்
போதையின் பக்கம்
போகாதிருப்பாள்...
மரணம் வரினும்
மானத்தை சற்றும்
இழக்காதிருப்பாள்...
கல்வியின் கனதியை கரைத்து
காலை மாலை கடைசிவரை
குடித்துக் கொள்வாள்...
ஆம்
அந்தப் பெண் ...ஆணாக இல்லை
பெண்ணாகவே இருந்தாள்.
-