மனமும் அறிவும்
தெளிவடைந்து கொண்டால்
உடலும் உள்ளமும்
ஒன்று பட்டே
உயர்ந்து நிற்கும்
வெற்றி பாதையை நோக்கி...
#அனுகவி-
காதல் பித்தன்
புல்லரித்து போன புற்களிடம்
உக்கி போன என்
உலக கதையை
உலறிக் கொண்டிருக்கிறேன்
விடியாத இரவுகளில்......
#அனுகவி
-
புரிதல்கள் இல்லாத இடத்தில்
மௌனமே சிறந்த மருந்து
பேசிக் கொண்டிருப்பதால்
நேர்மையும் நேரமுமே
வீணாகும்.. சந்தர்ப்பத்தில்
விலகி செல்வதே மேல்....
#அனுகவி-
வானத்தை கொஞ்சிய சில்மிஷங்களில் கொட்டித்தீர்க்கிறது எச்சில் முத்தங்களாய் மழை..
மண் மீது (மனம்) தொடும் வானம் ... நானோ இடைத்தரகர்தான்
என்னவோ ஏட்டின் பக்கத்தில்.....
#அனுகவி
-
முழுவதற்கும் முக்காலுக்கும்
சிறு வித்தியாசம்தான்
புத்திக்கும் புரிதலுக்கும்
இடைப்பட்டது....
🪶அனுகவி🪶-
கன்னங்கள் சிவந்திட
முத்தங்கள் பொழிந்திட வேண்டும்.....
யுத்தங்கள் செய்திட
புது யுத்திகள் சிந்திக்க வேண்டும்....
சினம் கொண்ட பிறகும்
உடல் யுத்தங்கள் நீண்டு செல்ல வேண்டும்...
சிறுமழை....அடர் இருள்.... மெல்லிசைக்காற்று....
இத்தனைக்கும் இடையில்....
இதழ் சூட்டினை தணித்திடா வண்ணம்.....
ஒரு கப் தேநீர்......
இரவுக்கு மட்டும்.....
#அனுகவி
#505-