have to say
Whomever it is
Whatever/Whenever it is
Want to be prepared to
Well make a cup of tea
prepare
Where ready to sip it
Well that's the
World where we live
Work less Drink lot
Whatever it is I
Want to boost everyone
Who were dear and near to me!
-
அன்னை சரசுவதியின் ஆசியோடும்
அழகன் முருகனின்
ஆசியோடும்
அன்னைத் தமிழின் ஆச... read more
சூழ்நிலைக் கைதியானால்
காதல்தான் அரும்புமோ
நட்பூக்கள் மலராதோ
மனிதன் வரலாற்றிலே!-
கவிதை எழுதாமல்
இருந்திருப்பேன் நான்
இயற்கையை ரசிக்காமல்
அழகை ஆராதிக்காமல்
அன்பாய் இருக்காமல்
புத்தியை வளர்க்காமல்
புதுயுக்திகளை வளர்க்காமல்
உறுதியாக இல்லாமல்
உதவும் கரங்களாக இல்லாமல்
நல்லபடி நான்குபேர் போற்றாமல்
நலமோடு வாழாமல்
கனவிலும் காதலிக்காமல்
கண்மணியை நேசிக்காமல்
மனிதனாக இல்லாமல்
மாண்புற வாழாமல் இருந்திருப்பேன்
தமிழனாய் பிறவாதிருந்தால்!-
Basically everyone
Born as Prince/ss and
Become King/Queen of
Beautiful Palace = Home!-
_____________________________________________
கனவுகளும் கற்பனைகளும்
நிஜமாகி நினைத்ததை நிறைவேற்றிட
அத்தனையையும் அடைய ஆசைப்பட்டால்
பகல் கனவும் பகட்டுக் கற்பனையும்
பலிக்குமா எனப் பழிப்போர் பார்த்து
பயங்கரமாக வியக்கும்படி
கற்பனையையும் கச்சிதமான
கனவுகளையும் நினைவுகளாக
கருவாக்கி உருவாக்கி
உண்மையில் உற்பத்தியாக்கி
கற்பனையில் கனவில் கண்டது
கதையல்ல நிஜமென்று
காண்பிக்க வேண்டும்!-
தடுமாறினாலும்
தடம் மாறினாலும்
தவறாது சுதாரித்தால்
தக்க மாற்றம் வரும்!-
சகத்தில் சகலத்திலும்
சந்தேகம் என்பது
சந்து ஏகம் ஐயம் ஆகும்
சரியான யுக்திகளால்
சகலவிதமாக
சந்து ஏகத்திற்கும்
சதா ஐயமின்றி
சரியாகச் செய்ய
சந்தேகமானதை
சரியானதாக்கி கொள்ளலாம்!!!-
Arise after every fall which
Absolutely rises you to be
Admirably Victorious!-