....
-
All vedas ended in vein,
When tried to cure the pain
Of blindness...
கண்கள் இருந்தும்
காணமுடியவில்லை
என்ற சோகம், அதை தீர்க்க
இல்லையே ஓர் வேதம்.
----.-.------
இவ்வுலகில் பிறந்து
நாட்கள் பல கடந்தாலும்
கருவரை வெளிச்சம்
கலையவில்லையே...
They may have traversed
Many days on this earth,
But the light of their
Mother's womb never left them...
----.-.------
விதையல்ல கண்கள் ,
புதைக்காதீர் ,
விழி இல்லாதவர்களுக்கு வ(உ)ரம் !-
நாம் ரசித்த வானவில்லை
நாம் ரசித்த இரவு விண்மீன்களை
நாம் ரசித்த இயற்கை வனங்களை
நாம் விளையாடிய கடற்கரை மணலை
நாம் இல்லாத காலங்களில்
பிறர் காணச்செய்வோம்
"கண்தானம்"-
என்றுமே உயிர்வாழ...
வேண்டும் பாசமாக பெற்றோரை பார்த்த விழிகள்!!
வேண்டும் நட்புடன் சிரித்து சிரித்து நீர் கோர்த்த விழிகள்!!!
வேண்டும் காதலுடனும் கிரக்கத்துடன் என்னவனை பார்த்த விழிகள்!!!
வேண்டும் அன்பையும், அணைப்பையும் என் குழந்தைக்கு ஊட்டிய விழிகள்!!!
வேண்டும் பிறர் வலி கண்டு தவிக்கும் என் கருணை விழிகள்!!!!!
கண்தானம் செய்து கண்ணாற கலந்திடுவோம் புவியினிலே..
-
சாதிக்கத் துடிக்கும்
சாதனை மனிதா
உன் சாதனை
பட்டியல் தொடரும்
உன் இறப்பிற்குப்
பிறகும்
கண் தானம் செய்....-