Sara_krish_quotes
வானத்து தேவதைகள்
வாழ்த்து கூற
வாழும் தெய்வதிற்கு
வரமாய் வந்த
என் வெண்ணிலவே
நீ வீசும் அன்பெனும்
வெளிச்சத்தில்
தேடினேன் ஒரு
அற்புத புதையலை
தேடிய பின்புதான்
தெரிந்தது அந்த
புதையலே நீ என்று
பெண்மையின் பெருமைக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
-
உணர்ச்சிகளின் வெளிப்பாடா...?
சிந்தனையின் செயல்பாடா...?
புரியாமல் புலம்பும் பலரில் ஒருவ... read more
கற்பனையில்
எழுதுபவனுக்கு
கதை என்பது
ஓர் புதிர் தான்
புதிரின் அழகை
எழுத தொடங்கியுள்ளேன்
இன்னொரு தளத்தில்
(Pratilipi)
மார்கண்டேயபுரம்
எனும் தலைப்பில்....-
ஏக்கம்
என்ன சொல்வேன்?
எப்படி சொல்வேன்?
எப்பொழுதும்
என்னவளை
எண்ணி
ஏங்கித்தவிக்கும் நான்
ஏக்கத்திற்கான
விளக்கத்தை...-
வெற்றிக்கு விதையிடவே
திறல் எனும் விதை சுமந்து...
என் விரல் பிடித்த
எழுதுகோலும்
விசை தந்து போ என்க...
காலத்தின் ஓட்டத்திற்கு
கால்கள் ஏனோ தானாய் ஓட...
ஓடும் நேரம் உள்ளுர
ஓர் கேள்வி...
ஏன் உனை நோக்கி
நிதம் என் தேடல்...
நீ யார்?
என்று....
விடை தெரிந்ததும்
வியந்து நின்றேன்...
ஏனோ
என் தேடலின் பெயர்
வாய்ப்பு....-
காதலை
குறை சொல்லித்
திரிந்தவன்
மறுக்கிறேன்
இன்று...
மரண வலி தர
மங்கை அவள்
நினைவும்
காண இயலா
மனத் தவிப்பு
போதும்
என்றுணர்கையில்...-
நின்
பிரிவொன்றும்
துயரில்லை
தூயவளே
கண்மணியே
நீயில்லா
நேரம் உந்தன்
நினைவென்னுள்
கண்மணியே....-
இவ்வளவு
உயிர் உண்டும்
இன்னும் உன்
பசி தீரவில்லையோ???
காத்திருக்கிறோம்
நாங்கள்
கவலையுடன்
உன் பசி தீர்க்க...
என்று
எவரென்று அறியாமல்...
பசி தீர்ந்தால்
விட்டுவிடு
இருப்பவராவது
பிழைக்கட்டும்...
வாழும் ஆசையுடன்-
இவ்வளவு
உயிர் உண்டும்
இன்னும் உன்
பசி தீரவில்லையா???
காத்திருக்கிறோம்
கவசத்துடனும்
கவலையுடனும்
யென்று
எவரென்றறியாமல்...
வருத்தத்துடன்-
யாருக்கும் உதவாமல்
எதற்கும் பயன்படாமல்
கையில் எடுப்பவர்
எல்லாம் பயனில்லை
என்று தூக்கி எறிய
எடுப்பார் யருமின்றி
அனாதயாய் கிடக்கும்
செல்லாக் காசு நான்....
-
பிடித்த
உன் காதலை
விட்டதும்
பிடித்துவிட்டேன்...
பிறகுதான்
தெரிந்தது
பிடித்ததை விட
முடியாதென்று....
அடிமையானேன்
அன்று உனக்கு
இன்று????
-