அவள் ஜன்னல்
ஓரம் சென்றேன்
அந்த கூந்தல்
மணத்தில் விழுந்தேன்,
தெளிந்து எழுந்து
பார்த்தேன்
அவள் அழகில்
மீண்டும் விழுந்தேன்..
----.-.------
Writer
Music lover
Single
என்ன கவலை
என்னில் இருந்தும்
கண்ணில் நீரை
தவிர்பேன்,
என்னவென்று
அவளும் கேட்க
கண்ணுள் நீரும் கசியுமே
----.-.------
நாளும் அவளைக்
கண்கள் பார்க்கப் பார்க்க
எனக்குள் ஏதோ
புதிதாய் இனிதாய்
காதல் என்றே
பிறக்கப் பிறக்க
நானும் பறந்தேனே..
----.-.-----
-
அருசி பொடைக்க
போன நேரத்துல
நினைச்ச அவனத்தான்,
அருசிய பொடைக்க மறந்து
சலுச்சி தல்லுனனே
தரையில நானும்
----.-.-----
-
பலரும் காணும் மலரானதே
உன் கண்கள்
என்று சொல்லிய என் மனமும்,
பூக்கண்டாலே நீயெனமயங்கும்..
----.-.-----
அனிச்சப்பூ மென்மையோ
இல்லை நீ மென்மையோ,
என்று கேட்டாலே எனை,
நானும் சொல்வேனே உனை...
----.-.------
முதல்முறை அவள்
என்னை அழைத்ததுமே,
முதல் பனி புள்மேல்
படர்ந்ததுபோல்
நெஞ்சினுள்ளே குளிர்ந்தேனே
இந்த காதலில்
நானும் விழுந்தேனே
----.-.------
ஹோலி அன்றே வண்ணம் எங்கே
என்று என்னை அவளும் கேட்க
மஞ்சள் குங்கம் கண்ணம் நுதலில்
வைக்க வரவா என்று
நானும் அவளை கேட்டேன்.
----.-.------
அறிவும் நூல்களாலே
கூடக்கூட
அறியாமை அகன்று
செல்வதுபோலே,
காதலாலே உன்னுடன்
கூடக்கூட
கலவின்பமும்
குடிப்பெருகுதே..
----.-.------
முடிவில்லா இன்பம் பெறவே
முயக்கமொன்று கொள்வோமா
முயலுகின்ற காற்றுமே
உல்லூர்ந்து செல்லாதவாரே..
----.-.------