அவள் கர்பகிரகம்
ஆயினும் என்ன விந்தை!!!
கருணையினால் தினம்தோறும் தனம் தாண்டிய
இதயத்தில் அன்பெனும் பாலாபிஷேகம்..
தொப்புள் கொடி காணா
தெய்வம் அவள்..
ஆயினும் அவள் வசிப்பது..
அன்பென்ற கர்பவாசல்..
ஆயிரம் தீபாராதனை அவளுக்கும் செய்யுங்கள்..
உலகம்மை அவள்..
மடி தாங்கும் தாய் அவள்
மலடி எனவும் அறியப்படுவாள் மயங்கொலிகளால்..-
சித்திரமாய் சிரிப்புடனே
சலங்கை சலசலக்க வந்த பெண்ணே..
செம்மையாக வாழ்வு அதை
சிறக்க நீயும் வாழ்த்தடியே..
பஞ்சம், பாவம் களைந்திடவே
களையருக்க வாரதியே..
விகாரி என விளித்து உன்னை
விகாரம் போக்க வரவேற்றேன்..
குடும்பம்,நட்பு, சொந்தம் அனைத்தும்
குதுகலிக்க கூவிடுவாய் குமரிபெண்ணே!!!
மனம் கனிந்து தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்🙏🙏-
விழிகளில் ஒரு மின்னல்
இதயத்தில் மழைச்சாரல்..
வேகத்தடை மீறி சீரும் இதயத்துடிப்பு..
புவியீர்ப்பு விசை உள்ளதே உண்மையில்..
பறக்கும் என் கால்களுக்கு யார் சொல்லுவார்?
மழை கண்ட மயூரமாய் சிலர்க்கும் என் அணுக்கள்..
சில்லிட்டு போன சிந்தை..
யாரது வயிற்றுக்குள் கிச்சு கிச்சு மூட்டுவது...
கண்ட நொடி கொண்ட தவிப்பு..
கடத்தப்படுகிறதா நிலமகளுக்கு?..
என்ன நிலையோ யாமறியேன் சுகிக்கிறேன் அதன் சுகம்தனில்
காதல் என்பர் அன்புடையோர்..
பரவசமென்பர் பெரியோர்கள்..
இறையோடு கலந்த நிலையென்பர் இறையன்பர்..
வெவ்வேறு பெயர்களில் விளிக்க அதுவும்
ஒரு பொருட் பன்மொழியோ?-
கருவில் தொடங்கி,
கல்லறை வரை
பிறரை,நம்மிடம் ஈர்க்கும்
பாச காந்தம்
காதல்!!!!!!!
இனிய காதலர் தின வாழ்த்துகள் 💐😊-
எத்தனை முறை விழுக்கிறேன்
எண்ணிலடங்கா கணக்குகள்...
படபடப்போடு கண் கலந்த அத்தினமா?
வற்றிய வார்த்தைகளோடு வெரும் காத்துதாங்க வருது என்று நகைத்த அத்தினமா?
சில பல சண்டைக்கு பின் வந்த கொஞ்சல்களில் அத்தினமா?
கருத்து ஒற்றுமை பல இடத்தில் குறைந்தும், ஒருவர் மீதொருவர் கொண்ட நம்பிக்கை விதைகிறோமே அத்தினமா?
கைசேர்ந்து நடக்கையில் நமக்கு நாம் என்ற இன்ப தினத்திலா?..
பேறு வலிதனை பகிர்ந்து கொண்டோமே.. நான் உடலில் நீ உள்ளத்தில் அத்தினமா?
நடைபயிலும் குழந்தையென தத்தி தத்தி வளர்த்தோமே மகவுதனைஅத்தினங்களிலா?
வார்த்தை வாள்வீச்சுகளிலும் மௌன கீதத்திலும் கழிந்த ஸ்வரமான தினங்களிலா?
எதில் விழுந்தேன் ?
அறியவில்லை, அறிய விரும்பவில்லை..
மீண்டும் மீண்டும் விரும்பியே விழுக்கிறேன் உன் மேல் காதலில்...-
தனிமை துயர் போக்கி
எனக்காக பாடும் வானம்பாடி
செய்திகளை செவி சேர்க்கும் செவ்வந்தி
இசையாய் மடியில் இளைப்பாற இடம் தரும் இலவம்பஞ்சு
பண்பலையால் பல பண்புகளை பகிர்ந்துதவும் நன் கேண்மை
உணர்வுகளோடு உறவாடும் நல்சொந்தம்...
செவியில் நுழைந்து இதயம் கலக்கும் அழகான காதல்...
ஆர்.ஜேவும் உறவுகளாய் மாற்றும் இனிய பாலம்...
ஒர் காஃபி, ஒரு மழை வேளை கூடவே என் வானொலி..
இதைவிட சொந்தமோ சொர்கமோ உண்டோ ?
இனிய உலக வானொலி தின நல்வாழ்த்துகள் 😊-
நாங்கள் யார் அஃறிணைகளா?
அவன் அவள் நாங்கள் அது
மரபு பிழைகளை படிக்க நேரம் உள்ளவர்களுக்கு
மரபணு பிழையான எங்களை மட்டும் உணர நேரமில்லையா ?
அலி என விளிக்கும் தாங்கள்
அழிக்கும் ஈசனும் அளிக்கும் உமையும் கலந்த அர்த்தநாரி நாங்கள் என்று புரியவில்லையா?
ஒன்பதா நாங்கள்?
ஆம் ஒன்பது ரத்தினங்கள் ,
ஒன்பது கிரகங்கள் என்று உயர்ந்த முழுமையடைந்த அனைத்தும் ஒன்பதே.. மாலின் மோகினி வடிவம் நாங்கள் மயங்கொலிச் சொற்கள் நாங்கள்
ஒருநாள் வாழ்க்கையாயினும்
ஒருவனுக்கே எங்கள் இதயம்..
நன்றிகள் பல இறைவா
விட்டில் பூச்சிகளாய் இருந்தாலும்
சில ஆண்களை போல் பிறந்த பஞ்சு முதல் பஞ்சை வரை சிதைக்கவில்லை
சில பெண்களை போல் மரபுகளை உடைக்கவில்லை
எங்களுக்கும் தாய்ப்பால் ஊறும்
எங்களுக்கும் வீரமுண்டு
வேண்டாம் உங்களது பரிதாபம்
வேண்டும் உங்கள் பாசம்
வேண்டாம் உங்களது கேலிகள்
வேண்டும் உங்களது கேண்மைகள்
வேண்டாம் உங்களது பரிவு
வேண்டும் எங்களை உயர்த்தும் நல்லறிவு
அசிங்கம் மன அழுக்குகொண்ட உயிர்திணையாய் இருப்பதை விட
நிமிர்வு , உயர்வுள்ளம் கொண்ட அஃறிணையாய் வாழ பெருமை கொள்கிறோம்..
ஏனெனில்
கோயிலில் உள்ள தெய்வமும் சிலருக்கு அது தானே..
குறிஞ்சி மலர்கள் நாங்கள்
குறைகூறி தரம் குறையாதீர்கள் நீங்கள்..
நாங்கள் யார்?-
அப்ரைஸல் கேட்டாதே
ஆன்சைட்டும் கிடைக்காதே
இரவு வாழ்க்கை தவறேல்
ஈவது(சபோர்ட்)க்கு முடிவில்லையே
உறக்கம் என்பதை துறந்திடு
ஊள்வினை ஊர்ந்து வருமே மேனேஜர் வடிவே
எஸ்கலேஷன்களுக்கு அஞ்சேல்
ஏற்றம் என்பது சொம்புதூக்கிகளுக்கே
ஐயம் இதில் சிறிதுமில்லையே
ஒப்புரவாய்(உலக போக்கு படி) தலையசை டி.எல்லிடமே
ஓதுவது ஒழியேல் வர்ஷன் வர்ஷனாக
ஔவியம்(பொறாமை) கொண்டு உலவில்லையெனில்
எஃகுகளுக்கு(கணிப்பொறி) கிடைக்கும் மரியாதையும் கிடைக்காதே..-
ஆம் காட்சிப்பிழையாய் காதல் பெற்றவருக்கு
காட்சிபிழையாய் உண்டானது காதல்
ஹார்மோன்களுக்கு
வாழ்வின்
காட்சியே பிழையாகும் காதலே..
உனை சேராதவருக்கு...-