என் தனிமையை
பதப்படுத்தி வைத்துக் கொண்டேன்.
இன்று வரை யாரும்
இரவல் கூட கேட்டு வந்ததில்லை.
யாருக்கும் என் தனிமை
தேவைப்படவும் இல்லை.
அதற்காக நான்
வருந்தியதும் இல்லை.
தனிமையை ரசிக்க
தெரிந்தவனுக்கு தான்
அதில் வசிப்பதில்
உள்ள இனிமை புரியும்.
காயப்பட வாய்ப்பு இல்லை.
என் தனிமைக்கு நானே துணை
இவ்வுலகில் யாரோ ஒருவரின் தனிமை போக்க
நம் தனிமை தான் சிறந்த மருந்து.
என் தனிமை மருந்தாய் இருந்து விட்டுப் போகட்டும்.-
(UG) 😇
Essayist ...
People called me " The Queen of anger"
So b... read more
இந்த வாழ்க்கை சிலருக்கு நினைத்தவரோடு,
பலருக்கு நினைவுகளோடு !
நீ
என்னுடன் இருந்த பொழுதுகளில்
அமுதமாக தித்தித்த அனைத்தும்
நான் உன்னை இழந்த பின்பு
விஷமாய் வதைப்பது ஏனோ !
என்னவனுக்கான
என் ஏக்கங்களை
எழுத்துக்களாய் வார்த்து,
வேண்டாம் என்று
கசக்கி போட்ட
வார்த்தைகளுள் இதுவும் ஒன்று-
இதற்கு முன் நான்
அறிந்ததில்லை
உயிர் அற்ற பொருள்களும்
பேசும் என்று!
ஏனோ தெரியவில்லை
நீ என்னை விட்டு விலகிய பின்
உயிரற்ற அனைத்து பொருட்களும்
உன்னைப் போலவே
என்னுடன் பேசுகின்றன,
நினைவுகளாக!
-
Are you in your 18-23 years ?
Then it's for you...
This is the age where the girls have to be very safe and careful.
Don't go out anywhere.
Don't hang out with your friends.
Don't fall for anyone
At this age, you don't know anything.
So, Get married.
You're matured enough to take up such complex responsibilities.
You're matured enough to run a family.
You're matured enough to give birth.
But, you are not matured enough to take a road trip with your friends.
Coz, the society is very tough to deal
-
வார்த்தைகள் தேடி அலைந்த போது
வரமாய் வந்தவன் நீ !
யார் கூறியது?
நினைவுகளுக்கு உயிர் இல்லை என்று ...
நினைவுகள் உணர்வோடு கலந்தவை
அவற்றுக்கும் உயிர் உண்டு
என்பதை அறிந்தேன்,
நம் காதல் ஓவியம் கிழிக்கப்பட்ட பின்-
எடுத்துக்கொள்கிறேன்
அவன் உதிர்த்ததில் இருந்து
அவன் அனுமதியுடன்...
உதிரம் உறையும் வரை
அவை போதும்
அவன் நினைவுகளோடு
வாழ்வதற்கு-