விழுந்து
எழ நினைத்தவனை
முழுவதுமாய்
புதைத்துவிட்டு
ஒய்யாரமாய்
சிரித்தது
உன்
ஒரு பக்க
கன்னக்குழி-
முற்றுப்புள்ளிகளால் முடங்காதவன்....
vishnudhasan4@gmail.com
மனிதனுக்கு மட்டுமே
பூமி சொந்தமெனில்,
கடவுள் பிற உயிர்களை
படைத்திருக்க மாட்டார்
நேசிப்போம்
நேசிக்க படுவோம்-
உன் ஆடம்பர
வெப்பதாகத்
தணிப்பான்களை
அருந்தும் முன்
பிற ஜீவன்களின்
அத்தியாவசிய
குடிநீரை
கொஞ்சம்
வழங்கி விட்டு செல்-
அனைவருக்கும்
பொதுவாய்
சிவக்கும் மருதாணி
சிவப்பல்ல
உன்னால் மட்டுமே
பொலிவுற சிவப்பேறும்
என் வெட்கக்காதல்-
எழுந்து மடித்து வைக்கப்பட்ட
படுக்கையில் சிதறிக் கிடக்கும்
தூக்கம் போல
காலங்கள் தீர
காதலித்த பின்னும்
மீதமிருக்கும் பேரன்புத்துகள்கள்...-
நடுநிசி நாய்களாய்
விழித்துக் கொ(ல்)(ள்)கிறது
கதைக்கவும்
காவலுக்கும்
அனுப்பி வைக்கிறேன்
கவிகள் எனும் பெயரிட்டு...-
(நி)(ந)னைத்து கொள்கிறேன்
கைகோர்த்த படியான நம்
கடற்கரை நடை கா(ய)(ல)ங்களை...
கடந்தும் விடுகிறேன்
அலையின் அமைதியாய்
-
கண்களால் பற்றியயொன்று
இமைகள் கொண்டு
அணைக்க எத்தனிக்கையில்
சுவாசம் வழி
ஊதி பெரிதாக்கப்பட்டு
இதழ் வழி
கொட்ட முயலுகையில்
நின் கனிவான
கை கோர்த்த
முத்தஈரப்படுத்துதலால்
இதயத்தில் இப்போது
இருவருக்குமான சுகத்தீயாய்
காதல்-
படகு பற்றியோ,
பாதுகாப்பு பற்றியோ,
பயம் இல்லை
காதல் கடல் பயணத்தில்
மூழ்குவதே பிரதான
நோக்கம் என்பதால்...-