என்மீது..!!
இரக்கங்கள் ஏதும் வேண்டாம்
முடிந்தால் சபித்து விட்டு செல்லுங்கள்..
சிலுவையில் ஏற்றி
சித்ரவதை படுத்துங்கள்..
ஆழிப்பேரலைகளினூடே அமிழ்த்தி
ஆனந்தமடைந்திடுங்கள்..
அதுவே யான் கொள்ளும் பேரானந்தம்..-
தவழ்ந்து வந்த உருவத்திற்கு
முகம் ஏதும் இல்லை போர்வைக்கு
வெளியே. சில அறைகளைக்
கூட்டி விட்டு கை ஏந்திய போது
துளிர்த்த ஈரம்,ஊசி விற்றுக்
கொண்டிருந்த மழலையிடம்
தோன்றவில்லை.இறங்கும் போது
தவழ்ந்த உருவத்தின் ஓட்டத்தோடு
தலை தெறிக்க ஓடியது
பெரும்பாலான,சிறுபான்மை
கணிப்புகள்.வாங்கப்படாத
ஒற்றை ஊசி குத்திக்
கொண்டே இருந்தது.
-
அவசர ஊர்தியின்
சத்தம் கேட்க.,
கரம் குவித்து
"யார் பெத்த பிள்ளையோ
பொழச்சிடனும் சாமி "
என வேண்டும்
அந்த ரவிக்கை
அணியாக் கிழவியின்
சதையற்ற வறண்ட
மார்க்காம்புகளில்
இன்னும் சுரந்து
கொண்டுதான்
இருக்கிறது தாய்மை.-
கொட்டி விடத் துரத்தும்
குளவியின், கூட்டையும்
கலைக்க மறுக்கிறது;
வாடகை வீட்டில்
குடியிருப்பவனின்
மனம்.-
அன்பு படரும் வேகம் விட
இரக்கம் படரும் வேகம் விட
நல்லெண்ணம் படரும் வேகம் விட
வெறுப்பு மாத்திரம் வேகம் படர்கிறதே-
"பணம்" உலகத்தை கவரும்...!!!
"அழகு" உள்ளத்தை கவரும்...!!!
"வார்த்தைகள்"
மனிதரை கவரும்...!!!
"இரக்கம்" நிறைந்த
ஒரு செயல்
கடவுளையே கவரும்...!!!❤
இனியவள்...
இரக்கமானவள்...!!!❤-
இரக்கம் உள்ளவரிடம் மட்டும் இறங்கிச் செல்லுங்கள் இல்லையெனி்ல் ஏறி மிதித்து சென்று விடுவர்.
-
இரைச்சலாய் மனமியங்கி
இரக்கத்தை இழந்து
நித்தம் நிம்மதிக்காக
இறையை தேடும் மனங்கள்
இயல்பை மறந்து-