இல்லார்க்கு இல்லையென்று கூறாமல் உள்ளதை அளித்து உளம் மகிழும் ஈகை பெருநாள்..
பசியின் கோரப்பிடியை உணர்த்த பசித்து உண்டு உபசரிக்கும் பாரம்பரிய பெருநாள்..
பக்தியின் சிறப்பை பறைசாற்ற கடுமையாய் விரதமிருந்து சிறப்பிக்கும் ஆன்மிக பெருநாள்..
உடம்பை மேம்படுத்த உணவை கட்டுப்படுத்தி உதிரத்தை புதுப்பிக்கும் உன்னத பெருநாள்..
வானத்தில் பிறை பார்த்து வானவியலை பின்பற்றும் ரம்மியமான பெருநாளே ரமலான் பெருநாள்..
இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் 🌙 🕌-
கொஞ்சம்கூட பொய்யில்லை
அன்பொன்றே உனதெல்லை
மஞ்சம்கொள்ள மாதில்லை
சொந்தம்கொள்ள பிள்ளையில்லை
சொத்து சேர்க்க தேவையில்லை
கந்தையின்றி ஏதுமில்லை
கர்மவீரர் போல் யாருமில்லை..
உண்மையாய் ஆண்ட மன்னன் நீ
உலகம் வியந்த மனிதன் நீ
ஊர் போற்றும் தலைவன் நீ
உன்னை தொழுவேன் நாளும் இனி..!!-
காங்கிரஸ் அரசரே
காமாட்சி ராசரே
சிவகாமி புத்திரரே
சினம் காணா தகப்பரே..
படிக்காத மேதையே
படித்தோர்க்கு போதையே
தர்மவீரம் பறைசாற்றிய
கர்மவீர பிரபுவே..
பஞ்சமற்ற குடியாட்சி
லஞ்சமற்ற அரசாட்சி
மனதிலுண்டு மனசாட்சி
மக்களென்றும் அதன்சாட்சி
ஆட்சியென்றால் உனதாட்சி
மீண்டும் வருமா உனதாட்சி..-
தொலைந்து போக நினைப்பவரை
தொலைந்து போக விடு;
இல்லையெனில் உன் நிம்மதி
தொலைந்து போய் விடும்.-
I have always been standing in the
dark while watching the light
from a distance.-
Would you stand by me,
When I've lost everything ?
Would you love me the same or
Would you leave me behind ?-
Someone: What is Maturity ?
Me: When you realize your dreams
and career are more important
than any damn person..!-
உண்மைகள் கசக்கும்
ஆனால் பொய்க்காது;
பொய்கள் இனிக்கும்
ஆனால் நிலைக்காது.-
தவறு செய்பவரை தட்டிக்
கேள் தவறில்லை
தவறு செய்பவரை திருத்தப்
பார் தவறில்லை
தவறு செய்பவருக்கு துணை
போவதே தவறு.-