மரகதச் சிறகுகள்
*************************
அந்த இரண்டாம் சிறகினை விரிப்பதற்குள்
எத்தனையோ அழகான நினைவுகளை
ஒளித்து வைத்திருந்தாள் அந்தக் குட்டி தேவதை
ஒவ்வொரு நினைவும் ஒரு சிதறலாகி
மழைத்துளிகளாக மனதை நனைக்க
மறந்திருந்த பேனா முனைகளை நினைக்க வைத்தது
எங்கோ வறண்டு கிடந்த என்
எழுத்தாணிக்குள் உயிர்"மை"யாகி
சிதறிக் கிடந்த எழுத்துக்களை ஒவியமாக்கி
தூய வெண்புன்னகையின் முகவரிக்குள் புகுந்து
பட்டாம்பூச்சியாய் படபடக்கும்...
மனதில் சிரிக்கும் மரகத ஒளி
மழலை மொழி - அவள்
மன மொழிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...-
இயற்கை மீது
பட்டுத் தெறித்த
ஓர் யதார்த்த சில்லு.💕
பொருளாக அதனை உறுதியோடு
செதுக்கிய ... read more
பற்றி எரிந்த காட்டில்,
பாழ்பட்ட பச்சை மரக்காற்றில்
எஞ்சியிருக்கும் ஈர்ப்பதத்தைப் போல,
அத்துனை அழிவுக்குப் பின்னும்
இன்னும் இயற்கையிடம்
மிச்சமிருக்கும் கருணை.
அறம் வழிந்தோடும்
அந்தப் பாதையில் துளிர்த்திருக்கும்
அன்பிற்கு அழிவில்லை.❤️🔥-
உண்மைகளை அழகாகத் தோற்கடித்து
பொய்களை எளிதாக வெற்றி பெறச் செய்து
அவமானங்களை அன்பாகப் பரிமாறிய இயற்கைக்கும்,
எதிர்பார்ப்புக்களை மறந்து
கசப்புக்களை மட்டுமே உண்டு
மரத்துப் போன மனதுக்கும்
இது புதிதில்லை,
உதடுகளில் உதிர்ந்த புன்னகையோடு,
கிழிந்து இரத்தம் தெறித்த
காயங்களின் வரிசையில் இது
இன்னொன்று என்றான்.
அறத்தினை மருந்தாக்கிப் கொண்ட
வழிப்போக்கன் ஒருவன்.
இருண்ட விழிகளின் மேல்
துளி நம்பிக்கையைத் தெளித்தது
அவன் வாழ்வியல்.
அறம் அவன் மனதின் நிறம்-
பொன்னி நதியோரத்தில் நின்றிருந்தவனை
யாரோ அழைத்ததால்
திரும்பிப்பார்த்துவிட்டு
யாரும் இல்லாததால்
சற்று கண்களை மூடியபோது
மலர்களை விடவும் மெல்லிய ஸ்பரிசம்
மழையினை விடவும் ஆழ்ந்த கருணை
கடவுளை விடவும் உயரிய நெறி
உயிர்கள் அன்பால் நிரம்பி வழிந்தது
நதிநீர் முழுதும் ஆர்பரித்தது
எல்லாம் மொத்தமாய் உணர்ந்த தருணம்
ஆம் அவர்கள் வந்துவிட்டார்கள்
என்னையும் உடன் அழைத்துக் கொண்டு
சரயு நதிக்கரையை
சுற்றிக்காட்டினாள் அம்மை சீதை
கண்களைத் திறந்தேன்
காவிரி சிரித்துக் கொண்டிருந்தது
கரையோரத்தில் படர்ந்த தந்தையவரின் பாதங்களுடன்...🌷-
துளிர்த்த மழையில்
கிளைவிட்டுப் பறக்க
சிறகினை சிலுப்பிய
அந்தப் பட்டாம்பூச்சிக்கும்
அவனுக்கும் இடையில்
எத்தனையோ மனிதர்கள்
படபடத்து ஓடிக் கொண்டிருக்க
அவனை அசையாமல்
நிற்கச்செய்த
அதற்குத் தெரியுமா..!
மரத்துப் போன காயங்களுக்கு
மருந்துகள் தேவையில்லை
ஆனாலும்
அந்த நிமிடத்திற்கு
அந்தக் காட்சி
அருமருந்தாகிப் போனது...☘️
அங்கு அப்போது
அவனும் ஒரு பட்டாம்பூச்சியும்
சில துளி மழையும்.-
சூரியன் வருவதற்கு முன்
விடிந்து விடுகிறது அவர்கள் வானம்
பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்கும்
சேர்த்து புத்தி சொல்லும் பாட்டிகள்
பள்ளிக்கூடத்து மதிய இடைவேளையை
ஆலமர ஊஞ்சலாக மாற்றும் மழலைகள்
வெள்ளாமையைப் பார்த்துக் கொண்டே
வேலைச்சுமையை மறக்கும் மனங்கள்
குட்டி போடும் மயிலிறகினை
புத்தகத்துக்குள் மறைக்கும்
ஆவலுடன் சில அரும்புகள்
இன்னும் அழகாகத் தான்
இருக்கிறது இந்த உலகம்
கிராமங்களின் விழிகளுக்குள்
அவர்கள்
நிலவின் ஒளியில் இளங்காற்றோடு
நிம்மதியைப் போர்த்திக் கொள்கிறார்கள்-
என்னவென்று புரியாமல் அவள் அழ
ஒன்றுமில்லை என்று அனைவரும்
அன்பு வார்த்தைகளால் அவளை
ஆகாயமாய் அரவணைக்க
இன்று இரண்டு நட்சத்திரங்கள் சூழ்ந்த
எங்கள் குட்டி வெண்மதிக்கு
இது முதல் விழா
பசுமை எப்போதும் நிலைத்திட
மரகதத்திற்கு மாமனின் மலர் தூவல்.💚
அடி எடுத்து வைத்த
முதல் விழா தொடங்கி
இனித் தொடரப்போகும்
ஒவ்வொரு விழாவும்
அடிக்கரும்பாய் இனித்திட
தங்கத்திற்கு
அண்ணனின் அன்புத் தூவல்.💛
எப்போதும் போலவே
உங்கள் அன்பு மழையில்
மனதின் மறைவில் - இது
ஆதவனின் சீராட்டு 🎶-
துளி மழையைப் பிடித்துத்
தேநீரில் கரைத்து
சிறிது நினைவுகளை சேர்த்தால்
மனதால் சுவைக்க,
திகட்டலைத் தொட்டு - மீண்டு
மீண்டும் தித்திக்கும் அளவிற்கு
சற்றே சுவை தூக்கலாக
ஒரு டிஷ் ரெடி.💞
Rain - Tea - Memories
#Fastfood but good for health
☘️ prepared by Nature 🌧️
will taste only by heart..!-
என் அன்புத் தங்கைக்கு,
தாயாக புதுப் பிறப்பெடுத்த உனக்கு
தாய்மையோடு இது முதல்
பிறந்தநாள்...!
அன்று குழந்தையான நீ என் கன்னத்தில் கிள்ளிய
நினைவுகளின் ஸ்பரிசம் நெஞ்சில்...
அந்தத் தழும்புகளின் தடங்கள் இன்னும் அழியவில்லை,
என்றும் அழியப்போவதுமில்லை...
பணம்,பொருள்,அன்பு,உறவு,பிரிவு
நெருக்கம்,தொலைவு,புதுமை,பழமை
என்ற இந்த உலகின் எல்லா விதி விலக்குகளுக்கும் அப்பாற்பட்டு
நம் பாசத்தை அது பறைசாற்றும்..!
இது தவிர,எப்போதும் போல்
சொல்ல வந்த அனைத்தையும்
உணர்ந்திருப்பாய் என்ற ஆழ்மனப் புரிதலுடன்,,,
பிறந்தநாள் வாழ்த்துகளோடு அண்ணன்-
அறத்தை விதைத்த ஒளவையில் தொடங்கி,
வாழ்வோடு கலந்த அசரீரி குரலாக
வள்ளுவனின் திருக்குறள் தாண்டி,
கடக்க விடாமல் கார்ல் மார்க்ஸ்,
அவருக்கு பின்னும் பல சேகுவேராக்கள்,
பல வண்ணங்களில் பொன்னியின் செல்வன்,
வீரயுக நாயகன் வேள்பாரி,உடையார்
அங்கங்கு இளைப்பாற துப்பறியும் சாம்புவுடன்
காமிக்குகள் கலர் புத்தகங்கள் என,
வார் அண்ட் பீசில் இருந்து கள்ளிக்காட்டு இதிகாசம் வரை
நீளும் நடை பயணத்தில் சுவாசித்து விட்டு வரலாம்,
ஜெயகாந்தன்,ஜெயமோகன், சேட்டன் பகத்,நா.மு, நாஞ்சில் நாடன்,
ரமணிசந்திரன், புதுமைப்பித்தன், அம்பை,எஸ்.ரா
பெர்னாட்ஷா,இறையன்பு இன்னும் விட்டுப் போன
பல இலட்சம் படைப்பாளிகளின்
மூச்சுக்காற்றையும் சேர்த்து.
அங்கங்கு பறக்கவும் செய்யலாம்
கலாமின் அக்னி சிறகுகளோடும்,
பாட்டன் பாரதியின் வரிகளோடும்,
ஆயிரம் மார்வல், டீசி வந்தாலும்
இது அழகான வேற ஒரு உலகம்ங்க.
முடிஞ்சா ஒருமுறை வந்து பாருங்க
நம்ம ஊரு திருவிழா - பகுத்தறிவுத் திருவிழா - ஈரோடு-