" ஏதோவொரு பிடித்தமும்
சிறு புன்னகையும்
போதும் இந்த
பெரும் வாழ்வினை
கடப்பதற்கு ...
-
அன்புத் தமிழன்🖋
(அன்புத் தமிழன் 🖋)
1.9k Followers · 386 Following
உலகின் மூத்த குடி என் தாய் தமிழ் மொழி என்று பெருமை கொள்வேன். ழ கரம்...
Joined 25 April 2018
26 APR AT 21:17
2 JAN AT 20:49
" அன்போடு பயணிப்பது
மட்டும் தான்
பேரன்பினை அடைவதற்கு
ஆகச் சிறந்த வழி ...
-
27 DEC 2024 AT 21:19
" தீரா ஞாபக மறதி
ஒன்று வேண்டும்
அதில் ஏதுமின்றி
ஒரே ஒரு முறையாவது
நான் நானாகவே
வாழ்ந்திட வேண்டும் !
-
6 NOV 2024 AT 18:55
நெடுங் காலமாய்
இந்த மழையில்
நனைந்து கொள்வதை
நான் விரும்பாமலே
இருந்து விட்டேன்
இப்போது நனைந்து
கொள்ள விரும்புகிறேன்
அந்த மழையைத் தான்
காணவே இல்லை ...
-
29 MAY 2024 AT 8:59
" வாழ்வின் நிதர்சனங்களைப்
பற்றி தெரிந்து
கொள்ளாத வரை
கண்ணீர் கூட
இலவம் பஞ்சை
விட மென்மையானது ...
-
25 APR 2024 AT 13:10
" அளவுக்கு அதிகமாய்
அன்பு செய்வதால் என்ன
ஆகிவிடப் போகிறது
பேரன்பின் முடிவிலியைத் தவிர ...
-