இதயக்
கோப்பையிலிருந்து
இமயத்தின்
விளிம்பை நோக்கி
இலக்கின்
பயணம் !-
The more you write, the more your happiness will be ✍
நெருங்கி வந்து
மென் மலருக்கு
முத்தம் தந்தாள்.
இதழ்களும்
இதழ் கள்ளும்
சந்தித்தன.-
விலை பேச முடியா
இவளின் விழிநீர்த்துளிகள்
அவனது விலைப்பட்டியலில்
முதலிட முன்மொழிவாக!
-
அமர்ந்து கொள்ள
உன் மடி வேண்டும்.
சாய்ந்து படர
உன் தோள் வேண்டும்.
உளறிக் கொட்ட
உன் செவி வேண்டும்.-
இவள் சொன்னாள் :
என் காதல்
பூவிதழின் மேலுள்ள
பனித்துளி போல்
தூய்மையானது.
அவனின் பதில் :
வேரின் உயிராகக்
கலந்திருக்கும்
நீர் போன்றது
என் ஆழமான காதல்.
-
உன் நினைவு மழையில்
நனைந்த
என் இதயத் தோட்டத்தில்
இதோ மீண்டும் பூக்கின்றன
சில கவிதைப் பூக்கள்!-
பேனா முள்ளின் ஊடே
ஒரு கவிதைப் பூ
காணும் கண்களுக்கு விருந்து
வாசிக்க வாசிக்க
எழுத்துக்களின் வாசம்
இதயக் கோப்பையை
இனிதாய் நிறைத்தது தேனென!-
அனைத்து மாற்றங்களும்
ஏற்றுக் கொள்ள வேண்டியவை தான்.
ஆனால் ஏனோ தெரியவில்லை.,
புதுப்புது புடவைகள்
நான்கைந்து இருந்தும்.,
பலமுறை உடுத்திய
அந்த பருத்தி சேலையின் மேல்
அப்படியொரு பற்று அவளுக்கு.
இதோ இன்றும்!
-
முதல் பார்வை தரும் நம்பிக்கை
இரண்டறக் கலந்தது இதயத்தில்
மூன்று முறை கிள்ளிப் பார்த்தேன்
நாலு பேருக்குத் தெரியாமல்
ஐந்து நொடியில் அதிசயக் காதல்
ஆறாகப் பெருகி
ஏழு நாளும் விடுமுறை இன்றி
எட்டா உயரத்தில் இப்போது
நவரச உணர்வுகளின் வடுக்கள்
பத்தென உந்தன் நினைவுகளின் வருடல்!-
An ocean is a book of emotions.
Each wave is the feel of its writer.
There is a lot of messages which helps
to produce more quotes and poems.
An observer can get more informations.
Sea nights never end.
The listener who is observing its sound.,
will produce more and more epics.
The never ending ethical stories
will continue perpetually.
-