இறக்கி வைக்க வேண்டும்
என்ற அவசியத்தில்
கேட்கும் இரவுப் பாடல்கள்
அனைத்தையும் அள்ளிக்கூட்டி
நடுதலையில்
நர்த்தனம்
ஆடச்செய்துவிடுகின்றன.
-
If not I then who else!!!
ஒரே ஒரு நொடியைச்
சேமிக்க
ஆயுள் முழுவதையும்
தாரை வார்க்கும்
தருணமே
விபத்து.
-
தனக்கு விருப்பமானவற்றில்
தன்னை இழப்பது
பொறுமையல்ல
அது தன்னையே தொலைப்பது.
-
நமது காதலை சுமக்கையில்
Weight mobile லைட் weighta இருக்குது
நமது சண்டையை சுமக்கையில்
Light weight mobile கனமா தெரியுது.
-
சில நேரங்களில்
அவ்விடம் இருந்து
வரும் "ngaaa" வும்
இவ்விடம் இருந்து
செல்லும் "daa"வும்
அந்நாளை ஒட்டு
மொத்தமாய்
அழகாக்குகிறது
-
இங்கு எல்லாரிடமும் எல்லாவற்றையும்
பகிர்ந்து கொண்டிருக்காதீர்கள்
இங்கு பலருக்கு
பெரிய காதுகளும்
மிகக் கூர்மையான நாக்கும்
குறுகிய பார்வையும்
மட்டுமே உள்ளன
மேன்மையான மனமுடையோர்
மிகச் சிலரே.
-
உனை கட்டி அணைத்து
உன் மார்பினை
என் கண்ணீரால் நனைத்து
விலகிட முடியாது
விரல்களை இறுக்கி
நீ என் கண் விட்டு அகலும் வரை
உனை சிறுபுள்ளியாய் தரிசித்து
விடை தரவில்லை எனினும்
இந்த நொடி நீ இங்கிருந்து
பல்லாயிரம் மைல்களுக்கு
அப்பால்செல்லப் போகிறாய்
என்ற ஏக்கத்தினை உள்ளடக்கி
இயல்பாய் என் இருத்தலை
உணர்த்த இன்று நான்
பட்ட பாடினை
என் நெஞ்சுக்கூடு
மட்டுமே அறியும்.
-
நீண்ட பிரிவு
நீளும் தேடல்
அடர்ந்த மௌனம்
ஆழமாய் தவிப்பு
மூழ்கடிக்கும் நின் நினைவு
ஆயினும்
அன்றலர்ந்த மலர் போல்
நான்
ஏனெனில் என்னுள் இருப்பது
நீ-
இயல்பை அழகெனக் கொண்டவள்
சிறகுகள் இருந்தும்
பறக்கத் தெரியாதவள்
அடம் பிடித்து தனக்கென
ஏதும் வாங்கத் தெரியாதவள்
தா என்றதும் தன்னிடம்
உள்ளதனைத்தும்
அள்ளித் தருபவள்
எப்பெரிது தாக்கினும்
ஏதும் பெரிதாய்
அலட்டிக் கொள்ளாதவள்
என்னிடம் கேட்டது
ஒரே ஒரு முத்தம்
முத்தமிடுகையில்
என்னுள் எழுந்தது
மயான அமைதியும்
கண்ணீர் பெருக்கும்
-