நான் எழுத விரும்பாத
அந்த காட்சி நிகழ்ந்து
பெரிய திருப்பம் ஏற்படுத்தி
கதையின் ஆதாரத்தை
மாற்றியிருந்தது
முதல் அத்தியாயம்
என் கதையில்
அவள் விலகியது..!!-
Just feel me..!! 😜
எனக்கு நிறைய
காதலிகள்
இருக்கிறார்கள்...
தினமும் அவர்களிடம்
பேசுவேன்
ஆனால் அவர்கள்
யாருக்கும் என்னை
தெரியாது..!!-
பிடிக்காமல் போன
எல்லாம் புரிந்து
கொண்டு ஏற்றுக்
கொள்ளப்படுகிறது
இப்போது.
இருபத்தைந்திற்கு
பிறகே காதல்
முதற்கொண்டு
என்னவென்று
புரிகிறது..!!
-
அழகு ஆபத்தானவை
என்கிறார்கள்
அனுபவவாதிகள்
ஆபத்து எவ்வளவு
அழகாக இருக்கிறது
கொண்டையூசி வளைவு
கொண்ட. இவளின் இடை
பேராபத்து தான்..!!-
நாட்கள் பெண்களுக்கு
மட்டும் பல முகமூடியை
மாட்டி விடுகிறது...
வேலை நாட்களில் அலுவல்
முகமூடியும் விடுமுறையில்
குடும்ப முகமூடியும்...
வேலையெல்லாம்
முடித்து விட்டு உறங்கலாம்
என்றால் அருகில் கணவர்
வந்து மனைவி முகமூடியை
தருகிறார்.
போதும் முடியவில்லை என்று
யாரிடம் சொல்வது..?
கண்ணாடியில் என் முகத்தை
தேடுகிறேன்
பெண் என்பதை தொலைத்து
பல முகமூடிகளே
தெரிகிறது. இந்த பெருமாற்றம்
மற்றவர்களுக்கு இயல்பாக
இருப்பது தான் இன்னும்
வேதனையளிக்கிறது..!!-