Gopinath Maruthai   (👑 கோ 👑)
389 Followers · 91 Following

read more
Joined 23 April 2018


read more
Joined 23 April 2018
18 JUL 2020 AT 23:09

மனம் முழுவதும்
அவள் நினைவுகள்;
சொட்டு நீர் பாசனமாய்,
என் கண்ணீர்.

-


19 SEP 2019 AT 12:41

பிரிவுக் கனலின் வெம்மையில்
நம் காதல்;
பட்ட மரமாகிய பிறகும்,
உன் நினைவு
புன்னகைத் துளிராக
உயிர் பெறுகிறது.

-


24 DEC 2018 AT 12:56

கடுகாய்
உலகின்
கண்களுக்குப்
புலப்பட்டாலும்;

கடலில்
அமிழ்ந்திருக்கும்
இமயம் இவனென,



உற்சாகப்படுத்தும் ஒவ்வொரு பெற்றோரும்,
"பேரன்பின் பெரும்
அடையாளம்."

-


23 DEC 2018 AT 23:41

பேரன்பின் அடையாளம் என்பது, வாளினால் என்னை வெட்டிடும் உன் கைகளுக்கு, மயிலிறகின் ஸ்பரிசம் தருவது.

-


7 AUG 2021 AT 14:02

நினைவுகளில்
உணர்வுகளைச்
சுமந்திருத்தல்.

-


27 MAY 2021 AT 18:47

கனவுகளும், காதலும்;
கண்ணீரும் இன்றி
ஒரு நாளாவது வாழ்ந்திட.

-


8 APR 2021 AT 17:02

பேரிரைச்சலும்
பெரு நிசப்தமும்
ஒன்றே;
இதயம்
உடையும்
ஓசை.

-


5 APR 2021 AT 19:40

காட்டுத் தீயின்
கோர நாக்குகளாய்;
போலிப் பாசம்
இதயத்தைச் சுட்டெரித்து
தான் விடுகிறது.

-


3 APR 2021 AT 14:28

என்ன செய்து
தொலைவது
இந்த நினைவுகளை;

அனல் காற்றாய்,
உடலைச்
சுட்டெரித்தாலும்

வியர்வை
குளிர்வித்தலாய்

உயிரை கசகசக்க
வைத்து விடுகிறது.

-


29 MAR 2021 AT 13:42

வாழ்த்துவதிலும்
வாழ்ந்து விடுவதிலும்
வேறென்ன இருந்து
விடப் போகிறது;
வாழ்வின் மீது
நான் கொண்ட
நம்பிக்கையையும்,
உன் மீது எனக்குள்ள
பெரு நேசத்தையும்
தவிர.

-


Fetching Gopinath Maruthai Quotes