மனிதனிடம் மனிதனின்
அடிமை விலங்கை
உடைத்தது சுதந்திர
போராட்டகாரர்கள்...!
மனிதனிடம் மனிதத்தின்
அடிமை விலங்கை
உடைத்த ஒற்றை
போராளியின்
நினைவு திருநாள்
இன்று...!
💞க.கொ.மணிவேல்...🖋️-
உங்களுக்கு விதிகள்
பிடிக்கவில்லையா..
பின்பற்றுங்கள்..
அதன் மேல் செல்லுங்கள்
பிறகு அவற்றை திருத்தி எழுதுங்கள்...!
- அம்பேத்கார் பொன்மொழிகள்
அம்பேத்கார் வெறும்
சாதிய தலைவர் அல்ல..
சாதிக்கப்பிறந்தவர்களால்
கொண்டாடப்பட வேண்டிய தலைவர்...!— % &-
கல்லா"மை
அறியா"மை
இல்லாமல்
போனால்
சமுகத்தில்
உயர்வென்ற
தாழ்வென்ற..
பேத"மை"
இல்லாமல் போகும்..!— % &-
இந்திய அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்.
நீங்கள் என்றோ எழுதியதை
இன்று வரை எழுத்துக்கூட்டி மட்டுமே தான் படிக்கிறோம்,
நீங்கள் ஆசைப்பட்ட இந்தியா இருக்கிறதா என்றால் பதில் இல்லை.
இருந்தாலும் மனதில் ஒரு கேள்வி,
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தையே உங்களால் ஒரு முறை வர முடியுமா என்று?
பாமரன் படித்தவன் என்ற பேதமின்றி,
அரசு சட்டம் அரசமைப்பு என்பவைகளை
கொஞ்சம் அலசி பார்க்க
-
கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து,
அது உனக்கு பயன்தரும்.
கற்பி, ஓன்று சேர், புரட்சி செய்
என்றார் ஒரு மேதை,
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
இந்த மூன்றும் வேண்டும் என்று
வரைத்தார் அரசியல் சாசனத்தை....
அங்கீகாரம் வேண்டி அயராது போராடியவரை
கொண்டாடினோம் நாமும்
சாதிக் கட்சி தலைவராக்கி,
சாதியை மறந்து நாம்
சாதிக்கும் நாள் என்றோ
என்ற ஏக்கத்தில் குமுறும்
சட்ட மேதையின் நினைவலைகள்....-
அடக்குமுறைக்கு எதிராக
எழுதப்பட்ட வரிகள்
எல்லாம் வரிகள் அல்ல,
அவைகள் எல்லாம்
வரலாற்று சான்றுகள்...-
அடித்தட்டு மக்கள் சமர்வது தீட்டா...
தழுவிய தீண்டாமை ஒழிப்பது தீட்டா...
பொதுவென இடத்தை ஒதுக்கியது தீட்டா...
வன்முறை ஒடுக்கிக் கற்பது தீட்டா...
பாலினக் கூலி ஒன்றியது தீட்டா...
ஓய்வில் வேலைத் தொடர்வது தீட்டா...
ஊதிய விடுமுறை தாய்மைக்குத் தீட்டா...
வேலை நேரம் குறைந்தது தீட்டா...
இரட்டைவாக்கின் உரிமை தீட்டா...
உடன்கட்டை மறந்து மலர்வது தீட்டா...
மொழிகள் நவத்தில் படித்தது தீட்டா...
நான்காம் எட்டின் பட்டங்கள் தீட்டா...
சாசனம் படித்து தேர்ந்தது தீட்டா...
நீதியின் நிழலில் நிற்பது தீட்டா...
எது தீட்டு...
தீட்டு தீட்டு என்றித்தானே கர்வமுற்றுக் கொள்கிறாயே...
திமிருடன் தீண்டாமை திலைக்குமேயானால்
தீட்டிய சட்டம் திருப்பிடுவாயா...???
திருந்திடுவாயா...???-
சீக்கு கொண்ட
மனித உள்ளத்தை
சீர்ப்படுத்த சித்திரையில் உதித்து !
பிஞ்சிலே நெஞ்சிலே
சமத்துவ வித்தை ஊன்றி
பாரெங்கு பரப்பி !
அடங்கி ஒடுங்கி
அடைப்பட்டு போகாமல்
அடிமை நீக்க புதியதோர்
சட்டம் படைத்து !
தொட்டால் குடித்தால் நுழைந்தால்
தீட்டு என்றவர்களுக்கு
சட்டத்தைத் தீட்டி தீட்டி
தீண்டாமையைத் தலைக்கொய்து !
சமத்துவம் பேணி
சாம்ராஜ்யம் படைத்த
சட்டமேதையே போற்றி !-
ஜாதிக்கெதிராய்
சட்டம் அமைத்த
உம்மையே
ஜாதித்தலைவரென
போற்றும் அளவிற்கு
வல்லரசு ஆகப்போகும்
ஜனநாயகம்
மாறியுள்ளது...
-