உன்னை காணாமல்
நான்
இருந்தால்,
எனது நிமிடம்
எனக்கானதாய்
இருந்திருக்கும்...!!!-
இந்த உலகம் - எனக்கு
ஒரு பிழையற்ற கவிதையை
எழுதி தந்தது...!!!
ஆம்,
பிழையற்ற கவிதையை
பிழை என கருதி - நான்
பித்தனாய் இன்று
பிழைக்க வழியின்றி
தவிக்கிறேன்...!!!-
எனக்கு ஒரு இதயம் வேண்டும் ❤️
என்னை காதல் செய்யும் அந்த இதயம்
என்னை மட்டும் நினைத்து
என்றும் துடிக்க வேண்டும் ...!!!
ஆம்,
இது ஆசையோ பேராசையோ
எதுவாயினும்
இப்படி ஒரு இதயம்
என்றும் எனக்கு வேண்டும்...!!!-
தலையணையே கோபம் கொள்ளாதே...!!!
பாவம் அவள்
என் அன்பை புரிந்து கொள்ளும்
மனப்பக்குவம் அவளுக்கு இல்லை,
ஆம்
நம் அருகில் இருந்திருந்தால்
இவ்வாறு நினைத்திருக்க கூட
மாட்டாள்,
விட்டு விடுங்கள்
எனது புலம்பல்களும் கண்ணீரும்
உன்னுடனே(தலையணை)
புதைந்து போகட்டும்....!!!-
ஒரு வேளை சுயநலவாதியோ நான்,
ஆம்,
நொடி பொழுதும்
உன் நினைவு என்னிடம்
இருக்கவேண்டும் - என
நினைக்கும்
கேடு கெட்ட சுயநலவாதி தான்...!!!-
எங்கள் காதல்
என்னும் புத்தகம் அச்சிடப்பட்ட நாள்
இன்று ...!!!
இந்த புத்தகத்தில்
ஒவ்வொரு பக்கமும்
ஒவ்வொரு அனுபவம் தான் - இங்கு
புன்னகை மட்டுமே அதிகம்
இதில் வலிகளுக்கும் வேதனைக்கும்
இடமில்லை....!!!!
எனக்காக ஏங்கி துடிக்கும்
இதயம் இருக்கும் வரையில்
தினந்தினம் எங்களுக்கு
காதலர் தினம் தான்...!!!
இன்று எங்கள் காதல்
என்னும் மழலைக்கு ❤️
பிறந்தநாள்...!!!-
இந்த புத்தகத்தின்
முதல் பக்கம் அன்பு,
இரண்டாம் பக்கம் ஆசை,
மூன்றாம் பக்கம் ஏக்கம்,
இவைகளோடு
தவிப்பு, நினைவு, பாசம்,
கருணை, கண்ணீர், கோபம்
ஊடல், உணர்ச்சி, மகிழ்ச்சி
என பயணித்து...!!!
இவையெல்லாம் மீண்டும்
அன்பு, ஆசை, ஏக்கம்
என
முடிவில்லாமல் தொடர்கிறது...!!!
இந்த அதிசய ❤️
காதல் புத்தகம் 📒...!!!-
உன்னையே
சுற்றி சுற்றி வரும்
என் நினைவுக்கு என்னவோ
நீ வேறாக
உன் உடமை வேறாக
பிரித்து பார்க்க
இயலவில்லை ...!!!
உன்
இரு காலணிகளும்
எனக்கு
இரட்டைகாப்பியமே ...!!!-
உன்னுடன்
பயணித்த
பாதைகளில்
இன்று ❤️
நினைவு என்ற
தென்றல் இடைவிடாது வீசி
இதயத்தை வருடி
சொல்கிறது ...!!!-