மறக்க முடியாத சில வலிகளையும்,
மறைத்து வாழத்தான் வேண்டும்.. 🙂-
Kk ians
#Like writing✍️✍️✍️
#Proud to be a தமிழன் 💪💪
#Kavi_navalan_tamil_yq_qu... read more
கனவில் வந்து,
காதலை மட்டுமல்ல,
கவிதைகளையும் தந்தவளை,
காரணமில்லாமல் தேடுகிறேன்,
கனவும் நிஜமும் வேறென்பதை மறந்து...
காலங்கள் கடந்தும்,
இன்னும் தேடி கொண்டு இருக்கிறேன்,
கானல் நீரில்,
காதல் மீன்களை...-
என்றோ செய்த
தவறின் தண்டனையும்,
என்றோ செய்த
உதவியின் பலனும்
எது எப்படியோ
தன்வினை தனக்கே...-
நீதான் என்பவர்கள்,
உடனே காணாமல் போகும்,
காரணம் தான் என்னவோ?..
இயந்திரமான உலகில்,
நாம் வேறென்ன எதிர்பார்க்க...-
காத்திருப்பு நீண்டாலும்,
காதல் என்னும் என் கவி,
காட்சிப்பிழை ஆகாது,
காந்தவிழியே...-
முடிவு அழகானது தான்,
மூன்றாம் பிறையாய் என் காதல்,
முடியாமல் இருந்தால்...-
நினைவுகளாய் நீ மாறிப் போக,
நிம்மதி இது தான் என்று,
நில்லாமல் ஓடும் என் வாழ்வு...-
நித்திரையில் தினமும்,
நிஜங்களை மறந்து,
நின்னை என்னவளாக,
நினைக்கும் நான்-விரும்பாத
நிதர்சனம்...-
என் முதல்காதல்,
சொல்லாமல் இருந்ததால் தான் ஏனோ,
இன்னும் பொக்கிஷமாய்,
அழியாத பொக்கிஷமாய்,
எந்தன் ஒருதலைக்காதல்...-